கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை
Send us your feedback to audioarticles@vaarta.com
கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் காஸ்ட்ரோ டயஸ் பலார்ட் அவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
காஸ்ட்ரோ டயஸ் பலார்ட் அவர்கள் கடந்த சில மாதங்களாக மிகுந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் இந்த நிலையில், தலைநகர் ஹவானாவில் நேற்று அவர் மரணம் அடைந்த நிலையில் கண்டறியப்பட்டதாகவும், கியூபா அரசு அறிவித்துள்ளது.
கியூபா அரசின் அறிவியல் ஆலோசகராகவும் செயல்பட்டு வந்த காஸ்ட்ரோ டயஸ் பலார்ட், முன்னாள் சோவியத் யூனியனில், அணு இயற்பியல் படித்து, இயற்பியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
9 அமெரிக்க அதிபர்களுக்கு சிம்மசொப்பனாக இருந்தவர் கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரா. இவரை ஒழித்து கட்ட அமெரிக்கா பல முயற்சிகள் செய்தும் முடியவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு தனது 90வது வயதில் பிடல்காஸ்ட்ரோ உயிரிழந்த நிலையில் தற்போது அவரது மகன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout