கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை

  • IndiaGlitz, [Friday,February 02 2018]

கியூபா நாட்டின் முன்னாள் அதிபர்  பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன்  காஸ்ட்ரோ டயஸ் பலார்ட் அவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

 காஸ்ட்ரோ டயஸ் பலார்ட் அவர்கள் கடந்த சில மாதங்களாக மிகுந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் இந்த நிலையில், தலைநகர் ஹவானாவில் நேற்று அவர் மரணம் அடைந்த நிலையில் கண்டறியப்பட்டதாகவும், கியூபா அரசு அறிவித்துள்ளது.

கியூபா அரசின் அறிவியல் ஆலோசகராகவும் செயல்பட்டு வந்த  காஸ்ட்ரோ டயஸ் பலார்ட், முன்னாள் சோவியத் யூனியனில், அணு இயற்பியல் படித்து, இயற்பியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

9 அமெரிக்க அதிபர்களுக்கு சிம்மசொப்பனாக இருந்தவர் கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரா. இவரை ஒழித்து கட்ட அமெரிக்கா பல முயற்சிகள் செய்தும் முடியவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு தனது 90வது வயதில் பிடல்காஸ்ட்ரோ உயிரிழந்த நிலையில் தற்போது அவரது மகன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

மீண்டும் டிரைவர் ராஜாவுக்கு முக்கிய பதவி கொடுத்த ஜெ.தீபா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தீவிர அரசியலில் இறங்கி 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற கட்சியை ஆரம்பித்தார்

ஓவியாவின் அடுத்த பட டைட்டிலை அறிவித்த முன்னணி நடிகர்

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவான களவாணி படத்தில் அறிமுகமான நடிகை ஓவியா, அதன்பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்தபோதிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியால் உலக தமிழர்களிடையே பெரும்புகழ் பெற்றார்.

ஓடும் ரயிலில் நடிகைக்கு பாலியல் தொல்லை: உதவிக்கு வராத சக பயணிகள்

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை சனுஷா. இவர் சமீபத்தில் ரயிலில் பயணம் செய்தபோது சக பயணி ஒருவர் பாலியல் தொல்லை செய்ததாக கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்

மத்திய பட்ஜெட் குறித்து கமல்ஹாசனின் காட்டமான விமர்சனம்

கிராமப்புறங்களுக்கு மத்திய அரசின் பார்வை திரும்பியுள்ளதாகவும், மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது என்பது ஆறுதலாக உள்ளதாகவும் கூறிய கமல்,

ஐசியூவில் இருந்து நார்மல் வார்டுக்கு கொண்டு வந்துள்ளோம்: பட்ஜெட் குறித்து தமிழிசை

தமிழிசை செளந்திரராஜன்: இந்த பட்ஜெட் தாக்கல் என்பது ஐசியூவில் இருக்கும் நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவது போல இப்போது முன்னேற்றம் செய்து வந்துள்ளோம்.விரைவில் அதை நடக்க வைப்போம்