இது வேற லெவல் ட்விஸ்ட்.. 'கோட்' படத்தில் சிஎஸ்கே வீரர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்துள்ள ‘கோட்’ திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டம் நடித்துள்ள நிலையில் தற்போது சிஎஸ்கே வீரரும் ஒரு சின்ன கேரக்டரில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளார் என்ற தகவல் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘கோட்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
‘கோட்’ திரைப்படத்தின் முன்பதிவிலேயே சாதனை வசூல் செய்த நிலையில் இந்த படம் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத மிகப்பெரிய சாதனை செய்யும் என்றும் இதற்கு முந்தைய அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ‘கோட்’ படத்தில் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டம் இருக்கும் நிலையில் முன்னாள் சிஎஸ்கே வீரர் பத்ரிநாத் இந்த படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் இடம் பெற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. முன்னாள் சிஎஸ்கே வீரர் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளர் பத்ரிநாத் தனது சமூக வலைத்தளத்தில் தனது பகுதிக்கான டப்பிங் பணியை முடித்துவிட்டதாக புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவில் ’இந்த படத்தில் முதல்முறையாக தான் ஒரு சின்ன கேரக்டரில் தோன்றுவதாகவும் தனது கேரக்டரின் விமர்சனத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் பத்ரிநாத் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Have done my bit for #GOAT 🎙️my first time being part of a movie ,very excited …awaiting reviews and feedback 🤞#TheGreatestOfAllTime @actorvijay @vp_offl @Ags_production pic.twitter.com/qoLOOdHv9C
— S.Badrinath (@s_badrinath) September 3, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com