close
Choose your channels

மன அழுத்தம் இருக்கின்றதா? ரஜினி படம் பாருங்கள்: முன்னாள் கிரிக்கெட் வீரர்

Tuesday, September 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் கடந்த 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அவர்களுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது தெரிந்ததே. மேலும் அவரை ரசிக்காத திரையுலகினர்கள் இருக்க மாட்டார்கள் என்பதும், அது மட்டுமன்றி பல்வேறு துறைகளிலும் ரஜினிகாந்தின் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டு வீரர்களில் பெரும்பாலானோர் ரஜினி ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத் அவர்கள் சமீபத்தில் பந்துவீச்சாளர் அஸ்வின் அவர்களுடன் நடந்த உரையாடலில் ரஜினிகாந்த் குறித்து கூறிய தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

‘உங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா? மனசோர்வு இருக்கிறதா? உடனே ரஜினிகாந்த் அவர்களின் படம் பாருங்கள். அவரை திரையில் பார்த்தவுடன் நமக்கு அதிகப்படியான எனர்ஜி கிடைத்து உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும், மனச்சோர்வு நீங்கி விடும்’ என்று கூறியுள்ளார்.

மேலும் தான் ரஜினிகாந்த் அவர்களை பெங்களூர் விமான நிலையத்தில் ஒரு முறை சந்தித்ததாகவும் அப்போது அவர் என்னை என்னுடைய வீட்டில் ட்ராப் செய்ததாகவும் இந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது என்றும் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீநாத் கூறியுள்ள தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment