ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த தைரியம் இருந்திருக்குமா? ராம்மோகன் ராவ் பேட்டி
- IndiaGlitz, [Tuesday,December 27 2016]
தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர். இந்த சோதனையில் கணக்கில் வராத பலகோடி ரூபாய் நோட்டுக்கள், கிலோ கணக்கில் தங்க நகைகள், மற்றும் ஏராளமான அசையா சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில் திடீரென உடல்நலம் குன்றிய ராம்மோகன் ராவ், சென்னை தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பின்னர் நேற்றிரவு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் சற்றுமுன்னர் ராம்மோகன்ராவ், தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வருமான வரித்துறை சோதனை வாரண்ட்டில் என் பெயர் இல்லை
இன்னும் தமிழக அரசின் தலைமை செயலாளராகத்தான் உள்ளேன்
40-50 சவரன் தங்கம் மற்றும் 1,12,320 ரூபாய்களை தான் என் வீட்டில் கண்டுபிடித்தார்கள்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் தலைமை செயலகத்திற்குள் சி.ஆர்.பி.எப் நுழைய தைரியம் இருந்திருக்குமா?
வருமான வரித்துறை சோதனையின் போது எதுவும் கண்டறியப்படவில்லை
வருமான வரி சோதனையின்போது துணை ராணுவத்தினால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டேன்
32 ஆண்டுகள் அனுபவமுள்ள அரசு அதிகாரியை இப்படித்தான் நடத்துவதா?
தமிழகத்தில் மக்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்கின்றனர்
நான் குறிவைக்கப்பட்டுள்ளேன், என் உயிருக்கு ஆபத்து உள்ளது
சந்தேகம் இருந்திருந்தால் என்னை பதவி நீக்கம் செய்துவிட்டு சோதனை நடத்தியிருக்கலாம்
துப்பாக்கியை காட்டி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்
தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கும் எனக்கும் தொடர்பில்லை
மறைந்த முதமைச்சர் ஜெயலலிதாவால் பயிற்சி கொடுக்கப்பட்டவன், அவரின் பாதச்சுவடுகளில் நடப்பவன் நான்
தமிழகத்தில் கடந்த 7 மாதத்தில் நிர்வாக ரீதியாக எந்த தவறும் நடக்கவில்லை
தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து இடமாற்றம் செய்த பின்பே விசாரித்திருக்க வேண்டும்