பரியேறும் பெருமாளை அடுத்து கரியேறும் கர்ணன்: முன்னாள் சென்னை மேயர் பாராட்டு!
- IndiaGlitz, [Saturday,April 10 2021]
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவான ’கர்ணன்’ திரைப்படம் நேற்று வெளியானது. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என தமிழக அரசின் புதிய கட்டுப்பாட்டையும் பொருட்படுத்தாமல் ரசிகர்களின் ஆதரவை நம்பி இந்த படம் வெளியான நிலையில் நேற்று ஒரே நாளில் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று உள்ளது
இந்த நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் சென்னை மேயர் மா சுப்ரமணியம் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படத்திற்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து பதிவு செய்த டுவிட்டில் கூறியிருப்பதாவது:
பரியேறும் பெருமாளில்
பாமர மக்களின் விடுதலை உணர்ச்சியைப் படைத்தவர்
'கரியேறும் கர்ணனில் இன்னும் அதை கம்பீரமாய் வடித்திருக்கிறார்.
தடுக்கப்பட்டவரின் உரிமைகளுக்கு தாளேந்திய மாரி செல்வராஜ்
வாளேந்தியும் வென்றிருக்கிறார்
வாழ்த்துகள்.
"பரியேறும் பெருமாளில் "
— Subramanian.Ma (@Subramanian_ma) April 10, 2021
பாமர மக்களின் விடுதலை உணர்ச்சியைப் படைத்தவர்
'கரியேறும் கர்ணனில் " இன்னும் அதை கம்பீரமாய் வடித்திருக்கிறார்.
தடுக்கப்பட்டவரின் உரிமைகளுக்கு தாளேந்திய மாரி செல்வராஜ்
வாளேந்தியும் வென்றிருக்கிறார்
வாழ்த்துகள். pic.twitter.com/gkZcbdXKV7