கர்ப்பமான நிலையிலும் டான்ஸ் ஆடி அசத்தும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் பாடலுக்கு டான்ஸ் ஆடி அசத்தி உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
பிரபல மலையாள நடிகையும் சின்னத்திரை பிரபலமுமான பியர்லே மான்னே மலையாளம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்பது தெரிந்ததே. அவர் பல மலையாள மற்றும் ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கி வரும் ’வலிமை’ படத்தில் ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நடிகை பியர்லே மான்னே, ‘பேபி மாமா டான்ஸ்’ என்ற பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணியாக இருக்கின்ற நிலையிலும் அவர் அந்த பாடலுக்கு மிக லாவகமாக நடனமாடும் காட்சிகள் பார்ப்பவரை ஈர்க்கும் வகையில் இருந்தாலும் ரசிகர்கள் ’இந்த நேரத்தில் கவனமாக இருங்கள்’ என்று அறிவுரை கூறி வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments