close
Choose your channels

அர்ச்சனாவை வறுத்தெடுத்த முன்னாள் போட்டியாளர்!

Saturday, December 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா அன்பு என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு ஆதிக்கம் செய்து வருவதை அந்த வீட்டில் உள்ளவர்களும் சரி, கமல்ஹாசன் சரி, தட்டி கேட்கவில்லையே என்ற அதிருப்தி பார்வையாளர்களுக்கு இருந்தது என்பது தெரிந்ததே. இதுகுறித்து முன்னாள் போட்டியாளர் சுஜா நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் வறுத்து எடுத்து உள்ளார். அவர் கூறியதாவது:

அர்ச்சனா என்றால் ஏன் அனைவரும் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. கமல் சார் கூட அர்ச்சனாவை பார்த்து எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்கவில்லை. ஒரு ஆங்கராக கேமரா முன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கண்டிப்பாக அர்ச்சனாவுக்கு தெரியும். ஆனால் ஏன் அதை எல்லாம் மறந்துவிட்டு ஏன் அர்ச்சனா இப்படி நடந்து கொள்கிறார் என்று தெரியவில்லை. அன்பு தான் ஜெயிக்கும், அன்பால் தான் எல்லோரையும் வெல்வேன் என்று சொல்லும் அர்ச்சனா, ஏன் எல்லோரிடமும் அன்பு காட்டவில்லை? என்று சரியாக ஒரு கேள்வியை முன்வைத்தார்.

அதேபோல் கோழி பண்ணை டாஸ்க்கில் பாலாஜி தன்னுடைய முட்டையை உடைத்து போது அவர் நாகரீகமாக நடந்து கொண்டார். ஆனால் அர்ச்சனா தன்னுடைய முட்டையை தானே உடைத்துவிட்டு சோம் மீது குற்றம் கூறியதோடு அதில் என் முகம் இருக்கிறது அதை உடைக்காதே என்று ஆத்திரம் அடைந்தார். இதற்கு முன்னால் நடந்த ஒரு நாமினேசனின்போது நாமினேஷன் செய்யப்படுபவர் புகைப்படத்தை தீயில் போட்டு எரித்தபோதெல்லாம் வராத கோபம் இப்போது மட்டும் ஏன் அர்ச்சனாவுக்கு வருகிறது

அன்பு என்று பேசிப் பேசியே நிஷாவை அடக்கி வைத்து வெளியேற்றி விட்டீர்கள். அடுத்ததாக உங்கள் டார்கெட் சோம் தானே. மேலும் ரியோவும் அனிதாவும் சண்டை போட்டபின்னர் அவர்கள் இருவரும் தங்களுக்குள் பேசி சமாதானம் ஆகி வந்த போது, ரியோவுக்கு ஸ்ப்ரே அடித்தார் அர்ச்சனா. இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் சுஜா கூறினார். மொத்தத்தில் அர்ச்சனாவுக்கு குறைந்தபட்சம் ரெட்கார்டு கொடுக்க வேண்டும் என சுஜா அவரை வறுத்தெடுத்து உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment