அமைச்சராக இருந்தவர்… டெலிவரி பாயாக வேலை செய்யும் அவலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ ஆப்கானிஸ்தான் அமைச்சராக இருந்த ஒருவர் தற்போது ஜெர்மனி சாலைகளில் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக வலம் வருகிறார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு முன்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபராக இருந்த அஷ்ரப்கானி அமைச்சரவையில் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக இருந்தவர்தான் சையத் அஹ்மத் சதாத். இவர் கடந்த 2018 முதல் அவரது அமைச்சரவையில் தீவிரமாக பணியாற்றி வந்தார். ஆனால் கடந்த 2020 இல் அதிபருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டே வெளியேறிவிட்டார்.
இந்நிலையில் ஜெர்மனி சென்ற முன்னாள் அமைச்சர் சையத் தன்னிடம் இருந்த பணம் அனைத்தும் தீர்ந்துவிட்டதால் அந்நாட்டில் உள்ள லிவ்ராண்டோ நிறுவனத்தில் உணவு விநியோகம் செய்யும் ஊழியராகப் பணியாற்றத் துவங்கிவிட்டார். இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில் 2 முதுகலைப்பட்டம் படித்தவரின் நிலைமையே இப்படியா என அதிர்ச்சி வெளியிட்டு வருகின்றனர்.
சையத் அமைச்சராக பதவிவகித்த காலத்தில் சவுதி டெலிகாம் நிறுவனத்திறக்காக சவுதி அரேபியா உட்பட 13 நாடுகளில் இருக்கும் 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் தகவல் தொடர்பு துறையில் 23 ஆண்டுகள் பணியாற்றினார். 2005-2013 வரை ஆப்கானிஸ்தானில் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தில் ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார்.
மேலும் 2016 – 2017 வரை லண்டனில் உள்ள அரியானா டெலிகாமின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பொறுப்பு வகித்தார். அடுத்து 2018 இல் ஆப்கானிஸ்தான் அமைச்சரவையில் எம்.பி பதவிவகித்த இவர் தற்போது ஜெர்மனியின் லீப்ஜிக்கில் வசித்துக்கொண்டு டெலிவரி பாயாக வேலை செய்து வருவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் முன்னாள் அமைச்சர் சையத்தின் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com