அஜித்தை சந்தித்து ஒரு மணி நேரம் பேசினோம்: முன்னாள் அதிமுக அமைச்சர் டுவிட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அஜித்தை சந்தித்து ஒரு மணி நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது என்றும் அந்த பேச்சில் இருந்த யதார்த்தம் உண்மை ஆகியவைகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அஜித்தின் தந்தை சமீபத்தில் காலமான நிலையில் அவரது மறைவிற்கு பல திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக நடிகர் விஜய், அஜித்தின் வீட்டிற்க்கே சென்று இரங்கல் தெரிவித்தார் என்பதும் அதேபோல் பல திரையுலக பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் நேரில் சந்தித்தார்கள் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் அஜித் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் அஜித்தை அவரது வீட்டில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து அவர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
தமிழ்த்திரையுலகின் மிக முக்கியமான முன்னணி நடிகர் திரு.அஜித் குமார் அவர்களின் அன்புத் தந்தை மறைவையொட்டி மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சார்பாக முன்னாள் அமைச்சர் அண்ணன் கடம்பூர் ராஜூ அவர்களுடன் அவரது இல்லம் சென்று ஆறுதல் தெரிவித்தோம்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அச்சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசும் வாய்ப்பு அமைந்தது. அனுபவமும், மனப்பக்குவம் நிறைந்த அவருடைய பேச்சில் எதார்த்தமும் உண்மையும் பிறர்க்கு உதவ வேண்டும் என்கிற தூய மனமும் வெளிப்பட்டது மிகுந்த பாராட்டுக்குரியது. எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம் போல்தான் வாழ்க்கை' அன்புத் தந்தையின் ஆசியோடு தொடர்க! வெல்க!
தமிழ்த்திரையுலகின் மிகமுக்கியமான முன்னணி நடிகர் திரு.அஜீத்குமார் அவர்களின் அன்புத் தந்தை மறைவையொட்டி மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்களின் சார்பாக முன்னாள் அமைச்சர் அண்ணன் @Kadamburrajuofl அவர்களுடன் அவரது இல்லம் சென்று ஆறுதல் தெரிவித்தோம்.
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) April 2, 2023
(1/3) pic.twitter.com/cewbOYiqCW
'எண்ணம்போல் வாழ்க்கை, எண்ணம்போல் தான் வாழ்க்கை'
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) April 2, 2023
அன்புத் தந்தையின் ஆசியோடு தொடர்க! வெல்க!
(3/3)
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments