தேனி அருகே பயங்கர காட்டுத்தீ: 8 பேர் பலி, மீட்கப்பட்டவர்களின் விபரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தேனி அருகேயுள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட திடீர் விபத்தில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்ட சுமார் 40 மாணவிகள் சிக்கி கொண்டனர். இவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் உதவுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வேண்டுகோளை ஏற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், உடனடியாக இந்திய விமானப்படையினர்களை சம்பவ இடத்திற்கு செல்லுமாறு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் அடிப்படையில் இந்திய விமானப்படையினர், கமாண்டோ படையினர் ஹெலிகாப்டரில் சென்று தீயில் சிக்கிய மாணவிகளை விடிய விடிய தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிர தேடுதல் வேட்டையின் பயனாக இதுவரை இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் காயமடைந்தவர்கள் உடனடியாக தேனி மற்றும் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்த நிலையில் காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 8 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் இவர்களின் ஐந்து பேர் பெண்கள் என்றும் தகவல்கள் வந்துள்ளது. இருப்பினும் மரணம் அடைந்தவர்கள் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை. மருத்துவமனையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்
மீட்புப்படையினர்களால் மீட்கப்பட்ட மாணவிகளின் விபரங்கள் பின்வருமாறு:
திருப்பூர் சிவசங்கரி, ராஜசேகர், சாதனா, பாவனா, நேகா, சபீதா, சென்னை பூஜா, சஹானா, மோனிஷா, ஸ்வேதா, இலக்கியா, விஜயலட்சுமி, அனுவித்யா. ஈரோடு சதீஷ்,
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com