விஜய் சேதுபதியுடன் செல்ஃபிக்காக படப்பிடிப்பு தளத்திற்கு அலைஅலையாய் திரண்ட அயல் தேச ரசிகர்கள்

  • IndiaGlitz, [Thursday,June 08 2023]

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு நடைபெற்று வரும் தளத்தில், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியை சந்திக்க மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவருடன் யோகி பாபு, ருக்மணி வசந்த், பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆர் கோவிந்தராஜ் கவனிக்க, கலை இயக்கத்தை ஏ. கே. முத்து மேற்கொண்டிருக்கிறார். அதிரடியான சண்டைக் காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை 7 C என்டர்டெயின்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில், இயக்குநர் பி. ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டமாக மலேசிய நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஈப்போ என்னும் மாநகரில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்திற்கு தினசரி உள் நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாட்டிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் படப்பிடிப்பினை பார்வையிடுவதுடன், படத்தின் நாயகன் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர், சுற்றுலா பயணிகளையும், விஜய் சேதுபதியின் ரசிகர்களையும் கட்டுப்படுத்த தெரியாமல் தவிக்கின்றனர்.

More News

ராமர் கேரக்டரில் நடித்த பிரபாஸுக்கு நன்றி: பிரபல தமிழ் திரையுலக பிரபலம் ட்வீட்..!

பிரபாஸ் ராமர் கேரக்டரில் நடித்த 'ஆதிபுருஷ்' என்ற திரைப்படம் வரும் 16ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக

விஜய் பிறந்த நாளில் 'லியோ', 'தளபதி 68' அப்டேட்.. டபுள் விருந்துக்கு தயாரா?

தளபதி விஜய் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினத்தில் 'லியோ' படத்தின் அப்டேட் மற்றும் 'தளபதி 68' படத்தின் அப்டேட் என இரண்டு விருந்துகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக

ரஜினியிடம் இருந்து கிடைத்த மறக்க முடியாத பரிசு.. தமன்னா நெகிழ்ச்சி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் முதல் முதலாக ரஜினியுடன் இணைந்து நடித்த தமன்னா,

புல்வெளி தரையில் ப்ளூ நிற நீச்சல் உடை… வேறலெவல் கிளாமரில் நடிகை ரைசா வில்சன்!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் சீசன்-1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது யாதார்த்தமான கேரக்டர் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் ரைசா வில்சன்

எனக்கு ரொம்ப பிடித்தது இதுதான்… நடிகை தமன்னா பகிர்ந்த சுவாரசியமான தகவல்!

தமிழ், தெலுங்கு, பாலிவுட் என்று இந்திய அளவில் பிரபல நட்சத்திரமாக இருந்துவரும் நடிகை தமன்னா பற்றிய தகவல்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் படு சுவாரசியத்தை ஏற்படுத்தி வருகிறது