பிப்ரவரி 10-ஆம் தேதி விஜய் தந்தையின் ஃபாரின் கார் ரிலீஸ்

  • IndiaGlitz, [Monday,February 08 2016]

விஜய் நடித்த 'தெறி' படத்தின் டீசர் கடந்த 5ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதையும் தெறிக்க வைத்த நிலையில் வரும் 10ஆம் தேதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்த 'நையப்புடை' படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று வெளியாகவுள்ளது.


எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'நையப்புடை'. இந்த படத்தில் பா.விஜய், சாந்தினி தமிழரசன், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் விஜயகிரண் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தாஜ் நூர் என்பவர் இசையமைத்துள்ளார்

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஃபாரின் கார்' என்று தொடங்கும் சிங்கிள் டிராக் பிப்ரவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. விஜய்யின் 'தெறி' படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணுதான் 'நையப்புடை' படத்தையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.