இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் மூடப்படுகிறதா? தொழிலாளர்கள் நிலைமை?
- IndiaGlitz, [Thursday,September 09 2021]
உலக அளவில் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனம் ஃபோர்டு. இந்த நிறுவனம் இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வகை கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது. இந்நிலையில் ஃபோர்டு நிறுவனம் தனது இந்திய ஆலைகளை மூட முடிவுசெய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே ஜெர்மனி, ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் செயல்பட்டு வந்த கார் உற்பத்தி ஆலைகளை ஃபோர்டு நிறுவனம் மூடிவிட்டது. தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிலும் இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது. காரணம் இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 20 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதனால் உற்பத்தி ஆலைகளை மூடிவிட்டு அமெரிக்காவில் இருந்து கார்களை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யவும் ஃபோர்டு முடிவு செய்திருக்கிறது. இதையடுத்து சென்னை மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு உற்பத்தி ஆலை மற்றும் குஜராத் சனண்ட் பகுதியில் செயல்பட்டு வரும் இரண்டு ஆலைகளும் மூடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள ஆலையை மூடினால் கிட்டத்தட்ட 4,000 தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்க வேண்டி இருக்கும் என்பதுதான் தற்போது அச்சத்தை ஏற்படுத்துகிறது.