தொடர்ந்து 13 ஆண்டாக இந்தியாவின் முதல் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்தவர்!!! வியக்க வைக்கும் சொத்து மதிப்பு!!!
- IndiaGlitz, [Thursday,October 08 2020]
இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டு உள்ளது. அந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 13 ஆண்டுகளாக இந்தியாவின் முதல் பணக்காரராக தேர்வு செய்யப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 2020 ஆம் ஆண்டிலும் இந்தியாவின் முதல் பணக்காரராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அவருடைய சொத்து நிகரச் சொத்து மதிப்பு 88 பில்லியன் டாலர், இந்திய மதிப்பில் 6 லட்சத்து 58 ஆயிரத்து 400 கோடி ஆகும். முகேஷ் அம்பானிக்கு அடுத்த படியாக 25 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடைய அதானி குழுமத்தின் கௌதம் அதானி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஃபேர்ப்ஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையின்படி முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 37.5 பில்லியன் டாலர் அதிகரித்து உள்ளது. “உலகப் பொருளாதாரமே கொரோனா தாக்கத்தால் பின்னடைவை சந்தித்து இருக்கும்போது இந்தியாவின் முதல் பணக்காரராக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார் முகேஷ் அம்பானி. அதோடு ஏற்கனவே இருந்த நிகரச் சொத்து மதிப்பின் அளவும் கூடியிருக்கிறது” என அந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது.
அடுத்து கொரோனா வைரஸ்க்கான மருந்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்திருக்கும் சைரஸ் பூனவல்லா இந்த பட்டியலில் 6 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. மேலும் ஏற்கனவே பணக்காரர்களின் வரிசையில் முன்னணியில் இருக்கும் பலரது சொத்து மதிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு உயர்ந்து இருப்பதாகவும் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டு இருக்கிறது.
#ForbesIndiaRichList2020 is now LIVE! Mukesh Ambani remains the richest man in India 13th year in a row; majority of the wealthiest got richer in the last one year. Check out India's 100 richest https://t.co/Y5G3bdSIBS pic.twitter.com/eZlSdlK79w
— Forbes India (@forbes_india) October 8, 2020