விஷாலின் 'அயோக்யா' ரிலீஸில் திடீர் பிரச்சனை!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷாலின் 'அயோக்யா' திரைப்படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி எதிர்பாராத சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷாலின் 'அயோக்யா' திரைப்படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கி இன்று காலை 8 மணிக்கு முதல் காட்சி ஆரம்பிக்கவிருந்த நிலையில் திடீரென இந்த படம் இன்று ரிலீஸ் இல்லை என்றும், சரியான ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகர் விஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியபோது, 'அயோக்யா திரைப்படத்தை ரிலீஸ் செய்ய ஒரு நடிகனாக செய்ய வேண்டிய அனைத்து முயற்சிகளையும் செய்துவிட்டேன். ஆனால் அது மட்டும் ரிலீசுக்கு போதுமானதாக இல்லை. என்னுடைய நேரம் ஒருநாள் வரும். இருப்பினும் நான் என்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டே இருப்பேன்' என்று கூறியுள்ளார்.
இந்த படம் இன்று வெளியாகாததால் விஷால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
As I wait. For my hardwork called #ayogya to release. I did my best.more than an https://t.co/nThd9d438M always. I groomed my child since it came on my lap.BUT.not enuf??? #gajjnimohamed. My time will come. I continue my journey Gb pic.twitter.com/yjKHQitJ7O
— Vishal (@VishalKOfficial) May 9, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments