எம்ஜிஆர்-சிவாஜி முதல் அஜித்-விஜய் வரை நடித்த கேரக்டரில் முதல்முறையாக பிரபுதேவா

  • IndiaGlitz, [Sunday,May 20 2018]

சினிமா ஹீரோக்களுக்கு காக்கி சட்டை அணிய வேண்டும் என்பது ஒரு கனவு என்றே சொல்லலாம். கம்பீரமான போலீஸ் கேரக்டரில் நடித்த பிரபலமான ஹீரோக்கள் படங்கள் பெரும்பாலனவை சூப்பர் ஹிட் தான். 'என் கடமை', 'தங்கப்பதக்கம்', 'காக்கி சட்டை', 'மூன்று முடிச்சு', 'என்னை அறிந்தால்', 'போக்கிரி' என எம்ஜிஆர், சிவாஜி முதல் அஜித், விஜய் வரை போலீஸ் யூனிபார்ம் போடாத ஹீரோவே இல்லை என்று கூறலாம்.

இந்த நிலையில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் , தயாரிப்பாளர் போன்ற அவதாரங்களில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை புகழ்பெற்ற பிரபுதேவா முதல்முறையாக ஒரு படத்திற்காக காக்கி சட்டை அணியவுள்ளார். 

கோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான நேமிசந்த் ஜெபக் தயாரிக்கும் படத்தில்தான் பிரபுதேவா முதன்முதலில் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் முகில் இயக்கவுள்ளார். இவர் பிரபுதேவா இயக்கிய 'போக்கிரி' மற்றும் 'வில்லு' படங்களில் பிரபுதேவாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை நேமிசந்த் ஜெபக் அவர்கள் தனது சமூக  வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இவருடைய தயாரிப்பில் உருவான ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' வரும் ஜூன் 22ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த தேசியவிருது பெற்ற கலைஞர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

'செம போத ஆகாதே': மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

அதர்வா நடிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கிய 'செம போத ஆகாதே' திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் நடைபெற்றது.

திருமண விருந்துக்காக புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்திய சப்-இன்ஸ்பெக்டர்

புதுச்சேரியில் இருந்து திருமண பார்ட்டி ஒன்றுக்காக மதுபாட்டில் கடத்தி வந்த சப் இன்ஸ்பெக்டர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை

மகனின் வெற்றிக்கு வாழ்த்து கூறிய அரவிந்தசாமி

கடந்த 90களில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரும் 'தனி ஒருவன்' படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகர்களில் ஒருவராக இருக்கும் அரவிந்தசாமி,

எடியூரப்பா-விராத் கோஹ்லி: பெங்களூரின் தலையெழுத்து இந்த 2 பேர்களின் கையில்?

சமீபத்தில் கர்நாடக முதல்வராக பதவியேற்ற எடியூராப்பா, இன்று மாலைக்குள் தனது ஆட்சியின் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில்