முதல்முறையாக மைக் மோகனுடன் ஜோடி சேரும் குஷ்பு!

  • IndiaGlitz, [Monday,February 14 2022]

கடந்த 80 களில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த சில்வர் ஜூப்ளி ஸ்டார் மோகன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த திரைப்படத்தை விஜய் ஸ்ரீ இயக்க இருப்பதாக வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படம் குறித்த மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. மோகன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் முதல் முறையாக அவருக்கு ஜோடியாக குஷ்பு நடிக்க உள்ளார். நடிகை குஷ்பு கடந்த 90 களில் இருந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இருந்தாலும் மோகனுடன் மட்டும் தமிழில் இதுவரை எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இதனையடுத்து தனது நீண்ட கால கனவு நனவாகி இருப்பதாகவும் ’மௌன கீதம்’ படம் பார்த்து தான் அவருடைய ரசிகையாக தான் மாறியதாகவும் அவருடன் நடிக்கும் வாய்ப்பை கொடுத்த இயக்குனர் விஜய்ஸ்ரீக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

‘ஹரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

புது காதலிக்காக… மனைவியை கொன்று தந்தூரி அடுப்பில் வேகவைத்து சாப்பிட்ட கணவன்!

பிரேசில் நாட்டில் புதிதாகச் சந்தித்த தோழி ஒருவருக்காக தனது மனைவியை கொன்று தந்தூரி அடுப்பில் வேகவைத்து சாப்பிட்ட

முதல் லாட்டரியிலேயே 35 கோடி ரூபாய் பரிசு… மகிழ்ச்சியில் இளம்பெண்!

இங்கிலாந்து நாட்டில் கணவர் ஒருவர் பல வருடங்களாக லாட்டரி

காஜல் அகர்வாலின் அடுத்த தமிழ்ப்படத்திற்கு 'யூ' சான்றிதழ்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் நடித்து முடித்துள்ள அடுத்த தமிழ் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் கொடுத்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ஹன்சிகா படத்தை தொடங்கி வைத்த விஜய்சேதுபதி: வைரல் புகைப்படங்கள்!

நடிகை ஹன்சிகா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த படத்தை விஜய்சேதுபதி தொடங்கி வைத்தார்

குறைந்த விலையில் தட்டித்தூக்கிய தரமான வீரர்கள்: தோனியின் மாஸ்டர் பிளான்!

2022 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நேற்று மற்றும் நேற்று முன்தினம் நடந்த நிலையில் தோனியின் மாஸ்டர் பிளானால் குறைந்த விலையில் தரமான வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டது