'மஹா' படத்திற்காக மெகா போஸ்டர்: 1000 அடியில் அசத்திய சிம்பு ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடித்த ’மஹா’ திரைப்படம் வரும் 22ஆம் தேதி திரையரங்கில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்திற்காக சிம்பு ரசிகர்கள் 1000 அடியில் மெகா போஸ்டர் அடித்து சாதனை செய்துள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ஹன்சிகாவின் 50வது படமான ’மஹா’ படத்தில் சிம்பு முதலில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தான் இருந்தது. ஆனால் அதன் பின்னர் சிம்புவின் ஆர்வத்தை கண்ட இயக்குனர் இந்த படத்தில் சிம்புவுக்கு முக்கிய கேரக்டராக மாற்றினார்
இந்த நிலையில் இந்த படம் வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்நிலையில் சிம்பு ரசிகர்கள் 1000 அடியில் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கோலிவுட் திரையுலகில் முதல் முதலாக ஒரு நடிகருக்கு 1000 அடியில் ரசிகர்கள் பேனர் அடித்து இருப்பது இதுவே முதல் முறை என்பதும் இந்த சாதனையை மதுரை சிம்பு ரசிகர்கள் செய்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிம்பு, ஹன்சிகா, சந்தானம், தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஜமீல் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
#Maha #STR ???? pic.twitter.com/mpwZxFb9Q1
— Cinema Updates (@mastervijay2020) July 18, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments