வரலாற்றிலேயே முதன்முறையாக 3 பெண் நீதிபதிகள் ஒன்றாக அமர்ந்து விசாரணை
- IndiaGlitz, [Thursday,March 05 2020]
சென்னை உயர் நீதிமன்றத்தின் 150 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக 3 பெண் நீதிபதிகள் ஒன்றாக அமர்ந்து ஒரு வழக்கை விசாரிக்க உள்ளனர். இதற்கான உத்தரவை தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி பிறப்பித்து உள்ளார்.
மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப் பட இருக்கு நிலையில் 3 பெண் நிதிபதிகள் சேர்ந்து ஒரு வழக்கை விசாரிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப் பட்டு இருப்பது அனைவரின் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இ.எஸ்.ஐ. எனும் தொழிலாளர் காப்பீட்டுச் சட்டம், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்துமா என்பது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. இந்த வழக்கை பெண் நீதிபதிகள் புஷ்பா சத்திய நாராயணா, அனிதா சுமந்த், ஆஷா ஆகிய மூன்று பேர் கொண்ட முழு அமர்வு குழு விசாரிக்க இருக்கிறது.
தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் உள்ள 55 நீதிபதிகளில் 9 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.