அமெரிக்க பங்குச்சந்தையில் அஜித்தின் 'துணிவு': லைகாவின் அதிரடி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Sunday,January 08 2023]

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் 11ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இன்னும் மூன்றே நாட்களில் திரையரங்குகளில் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்ற லைகா நிறுவனம் வித்தியாசமான முறையில் புரமோஷன் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக துபாயில் பறக்கும் பலூனில் இருந்து கொண்டே போஸ்டர் வெளியிட்டது, நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் டிரைலர் வெளியானது என வித்தியாசமான முயற்சிகளில் இந்த படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் புரமோஷன் செய்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது முதல் முறையாக அமெரிக்க பங்குச் சந்தை கட்டிடமான நாஸ்டாக்கில் ’துணிவு’ படத்தின் போஸ்டர் வெளியாகவுள்ளது. ஒரு இந்திய திரைப்படத்தின் போஸ்டர் இந்த கட்டிடத்தில் வெளியாவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், மஞ்சுவாரியர், வீரா, ஜான் கொகைன் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

பிறந்த நாள் கொண்டாடும் 'வாரிசு' ரஞ்சிதம் .. குவியும் ரசிகர்களின் வாழ்த்து!

தளபதி விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ரஞ்சிதமே' என்ற பாடலை விஜய்யுடன் பாடிய எம்எம் மானசி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

'வாரிசு' - 'துணிவு' : ரிலீசுக்கு முன் குவித்த கோடிகள் எவ்வளவு?

அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 11-ம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களின் டிரைலர்கள் மிகப்பெரிய

'நான் பெரிய நடிகரா ஒப்புக்கொண்டது இந்த ரெண்டு பேரை மட்டும் தான்: சிவகுமார்

நான் பெரிய நடிகராக ஒப்புக் கொண்டது இந்த இரண்டு நடிகர்களை மட்டும் தான் என்றும் அந்த பட்டியலில் என்னுடைய பெயர் கூட இல்லை என்றும் பழம்பெரும் நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்ப்பமாக இருக்கும்போது தலைகீழாக யோகா: 'துணிவு' நடிகர் மனைவியின் அதிர்ச்சி வீடியோ

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் வரும் 11ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகரின் மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில்தான் அவர் தலைகீழாக யோகா செய்து

பாஜகவில் இருந்து வெளியேறினாரா பிரபல இயக்குனர்: அவரே அளித்த விளக்கம்!

நடிகை காயத்ரி ரகுராம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் இருந்து விலகிய நிலையில் பிரபல பெண் இயக்குனர் ஒருவரும் பாஜகவிலிருந்து விலகி உள்ளதாக ஒரு சில இணையதளங்களில் செய்தி