ப்ரியங்கா பற்றி இப்படி பேசுறதுக்கு, மணிமேகலை பொறுப்பு எடுத்துக்கணும்... ரவீந்தர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் நாட்டின் நிகழ்கால பிரச்னைகளைவிட, நடிகர் விஜயின் மாநாடு குறித்த செய்திகளை விட இப்போது தமிழக மக்களிடம் கருத்து கேட்கும் அளவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலுருந்து வெளியேறிய மணிமேகலை பதிவிட்ட பதிவு இவ்வளவு பேசுபொருளாகியுள்ளது என பிரபல சினிமா தயாரிப்பளார் ரவீந்திரன் பேசியுள்ளார்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளாராக இருந்த மணிமேகலை சில நாட்களுக்கு முன்னர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதன் பின் ஊடகங்களில் விஜய் டிவி பிரபலம் ப்ரியங்கா குறித்தும், மணிமேகலை குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் வெளிவரத்தொடங்கியுள்ளது.
இது குறித்து சினிமா தயாரிப்பளார் ரவீந்திரன் indiyaglitz நேயர்களுக்கு அளித்த பேட்டியில்....
" என்ன பிரச்னைனே யாருக்கும் தெரியல. மணிமேகலை தன் சுய கௌரவத்தை விட்டுட்டு நிகழ்ச்சி பண்ணமுடியாதுனு வெளில வராங்க. Ex.Anchor அப்டினு ஒரு வார்த்தையை பயன்படுத்தி அந்த வீடியோல பேசிருக்காங்க.
அவங்க பிரியங்காவைதா இப்டி பேசுறாங்கனு தெரியுது. அதை ஏன் தைரியமாக சொல்ல.
நான் ப்ரியங்காவின் ஆதரவாளர் இல்லை. நான் அவர்களின் விளையாட்டுக்குத்தான் கருத்து தெரிவிக்கிறேன். அவர்கள் Personal க்கு போக விரும்பலை.
ப்ரியங்காவின் Charactor மற்றும் அவரின் குடும்பத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டார் மணிமேகலை.
தற்போது ஒரு ஆடியோ சமூக வலைத்தளத்துல வைரல் ஆகிட்டிருக்கு. அந்த ஆடியோவோட உண்மை தன்மை பற்றி தமிழ் பொண்ணு மணிமேகலை ஆடியோ போட்டிருக்கணும்.
சுய கெளரவம் எல்லாம் இருந்தா எந்த தயாரிப்பாளரும் படம் எடுக்க முடியாது. எந்த துறையில இந்த பிரச்னை இல்லை.
ப்ரியங்கா யார் என்று ப்ரியங்காவின் குடும்பத்துக்கு தெரியும். ப்ரியங்காவிற்கு வாய்ப்பு குடுத்த விஜய் டிவிக்கு தெரியும்.
மணிமேகலை இந்த சூழ்நிலையை முதிர்ச்சி இல்லாமல் கையாண்டுவிட்டார். மணிமேகலையோட குடும்பத்த பற்றி இங்க யாரும் பேசலை. மணிமேகலயோட முன் வாழ்க்கை பற்றி யாரும் பேசல, ஆனா ப்ரியங்காவோட தனிப்பட்ட வாழ்க்கை இங்கு பேசு பொருளாகியிருக்கு.
என அவர் பேசியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Mithra Anjali
Contact at support@indiaglitz.com
Comments