எனக்கு தளபதி மாமா, இளையதளபதிக்கு நா மாமா - GOAT கதையை உளறிய பிரேம்ஜி

  • IndiaGlitz, [Monday,September 02 2024]

எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ணமாட்டோமா என்ற புகழ்பெற்ற வசனத்தின் நாயகன், இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி ஆவார். இவர் வெங்கட் பிரபு இயக்கிய எல்லா படத்திலும் இவருக்கு என்று ஒரு ரோல் இருக்கும், அந்தவகையில் GOAT படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இளையதளபதி விஜய், மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, யோகிபாபு, வைபவ், பிரேம்ஜி என மிகப்பெரிய நடிகர்கள் எல்லாம் ஒன்றா நடித்து இன்னும் சில தினங்களில் வெளிவரவுள்ள GOAT தமிழகத்தில் பேசு பொருளாகியுள்ளது.

Indiaglitz நேயர்களுக்கு அவர் அளித்த பேட்டி....


இந்த படம் வேர லெவெல்ல இருக்கும். இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை ரசிகர்கள் கத்துறது, கை தட்டுறது அப்டினு enjoy பண்ணுவாங்க. நான் ஏழு முறை படம் பார்த்துட்டேன்.

Producers ரொம்ப நல்லவங்க. நிறைய சம்பளம் குடுத்தாங்க.

விஜய் சார் ரொம்ப reserved type . யாருகிட்டயும் பேசமாட்டார். ஷூட்டிங் முடிச்சிட்டு அவர் இடத்துல போய் உட்கார்ந்துருவார்.

ஆனா, மங்காத்தால அஜித் சார் சூட்ல கல கலனு இருப்பார்.

வெங்கட் பிரபு படம்னா கிரிக்கெட் இல்லாம எப்படி. இந்த படத்துலயும் கிரிக்கெட் சம்பந்தபப்டட் காட்சிகள் உண்டு. நானும் CSK cap போட்டு நடிச்சிருக்கேன்.

3 மணிநேரம் படம் பார்த்தாலும், இந்த படத்தோட scenes பார்த்துகிட்டே இருக்கலாம். மூணு நேரம் பத்தாது அவ்ளோ enjoyment படத்துல இருக்கு . நீங்க பார்க்கும்போது feel பண்ணுவீங்க

பாடல் குறித்த நெகடிவ் விமர்சனங்கள் யுவனை பாதிக்கல. அதையெல்லா தவிடுபொடி ஆக்குறமாறி படம் வந்திருக்கு. தியேட்டர்ல போய் பாருங்கள்.

தளபதியோட 68 வது படம். இந்த மாறி தளபதிய எந்த படத்துலயும் பார்த்திருக்க முடியாது.

எங்க அண்ண எனக்கு என்ன வருமோ அதுக்கு தகுந்த கேரக்டர்தான் எனக்கு தருவான். அதனால எங்க அண்ணன் படத்துல நடிக்குறது எனக்கு ஈஸி.

வெங்கட் பிரபுவோட பெஸ்ட் மூவியா GOAT இருக்கும் என பிரேம்ஜி கூறியுள்ளார்.