21 ஆண்டுகளுக்கு பின் மெஸ்ஸி எடுத்த அதிரடி முடிவு: ரசிகர்கள் அதிர்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
21 ஆண்டுகளுக்குப் பின்னர் பார்சிலோனா அணியின் முன்னணி வீரரான மெஸ்ஸி எடுத்த அதிரடி முடிவு காரணமாக ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 21 ஆண்டுகளாக பார்சிலோனா கால்பந்து அணியில் விளையாடி வந்த மெஸ்ஸி பல்வேறு சாதனைகள் செய்தார் என்பதும் அந்த அணிக்காக அவர் பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடதக்கது. உலகின் நம்பர் 1 வீரரான மெஸ்ஸியால் பார்சிலோனா அணி பெருமை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பார்சிலோனா அணியில் மெஸ்ஸி விளையாடும் ஒப்பந்தம் காலாவதி ஆனது அடுத்து அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கக் முயன்றதாகவும் ஆனால் அந்த ஒப்பந்தத்தில் மெஸ்ஸி கையெழுத்திடவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பார்சிலோனா அணியின் நிதி நெருக்கடி மற்றும் கட்டமைப்பு விதிமுறைகள் மீண்டும் மெஸ்ஸியை இணைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சற்று முன்னர் பார்சிலோனா அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மெஸ்ஸி பார்சிலோனா அணியில் தொடர மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 21 ஆண்டுகளுக்குப் பின்னர் மெஸ்ஸி பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறுகிறார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் மெஸ்ஸி இனி தனது தாய்நாடான அர்ஜென்டினா அணிக்காக விளையாடுவார் என்று கூறப்பட்டு வருகிறது.
LATEST NEWS | Leo #Messi will not continue with FC Barcelona
— FC Barcelona (@FCBarcelona) August 5, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments