விஜய்யுடன் நடித்த அனுபவம்: முன்னாள் கால்பந்து வீரரின் நெகிழ்ச்சியான பேட்டி!

  • IndiaGlitz, [Monday,August 19 2019]

அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில்' படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ள முன்னாள் கால்பந்து வீரர் ஐஎம்.விஜயன், விஜய்யுடன் நடித்த அனுபவங்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விஜய் தன்னை எப்போதும் 'சார்' என்று மரியாதையுடன் அழைப்பார் என்றும், தன்னுடைய கால்பந்து போட்டிகளை யூடியூபில் பார்த்து ரசித்ததாகவும், பேட்டியில் கூறிய ஐஎம் விஜயன், மேலும் கால்பந்து போட்டியில் உள்ள சில நுணுக்கங்கள் குறித்தும் தன்னிடம் பேசியதாகவும் தெரிவித்தார். குறிப்பாக சிக்ஸர் கட் மற்றும் பாஸ்ட் பேஸ் மூவ்மெண்ட் குறித்து விஜய் தன்னிடம் பேசியது தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும், 'பிகில்' படத்தில் அவர் கமிட் ஆன பின்னர் கால்பந்து குறித்து நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டிருந்தார் என்பது தனக்கு புரிந்ததாகவும் ஐஎம்.விஜயன் தெரிவித்தார்.

விஜய் தன்னிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டதாகவும் அவருடன் நடித்த நாட்கள் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகள் என்றும் விஜயன் தனது பேட்டியில் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.