உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரருக்கு கொரோனா தொற்று!
- IndiaGlitz, [Monday,January 03 2022] Sports News
கால்பந்து உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வரும் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
அர்ஜெண்டினா கால்பந்து வீரரான மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் தங்க பூட்ஸை 7 ஆவது முறையாக மெஸ்ஸி வாங்கியிருந்தார். மேலும் 34 வயதான மெஸ்ஸி சமீபத்தில் 21 ஆண்டுகளாக விளையாடிவந்த பார்சிலோனா கிளப் அணியில் இருந்து வெளியேறி பி.எஸ்.ஜி கிளப் அணியில் இணைந்து கொண்டார்.
இந்த அணிக்காக தற்போது பிரெஞ்ச் கோப்பை கால்பந்து போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார். பிரான்சில் நடைபெறும் இந்த கோப்பை தொடருக்கான முதல் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா வைரஸ் உறுதிச்செய்யப்பட்டு இருக்கிறது. இவரைப் போலவே மற்ற 3 வீரர்களுக்கும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
ஏற்கனவே அணியின் முக்கிய வீரரான நேமார் காயம் காரணமாக பிரெஞ்ச் கோப்பை தொடரில் இருந்து விலகியிருக்கிறார். தற்போது பி.எஸ்.ஜி அணியில் 4 வீரர்களுக்கு கொரோனா உறுதிச்செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் இன்று நடைபெற உள்ள போட்டியில் பெறும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்று கருத்துக் கணிப்புகள் கூறப்படுகின்றன.
இதைத்தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ள மெஸ்ஸிக்கு உடல்நல பாதிப்பு எதுவுமில்லை என்றும் அவருக்கு அறிகுறியே இல்லாத நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.