சிரியாவில் கொத்து கொத்தாக பலியாகும் சின்னஞ்சிறு சிறார்கள்
- IndiaGlitz, [Monday,February 26 2018]
சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஐநா உள்பட பல நாடுகள் முயற்சி செய்தும் முடியவில்லை
இந்த நிலையில் கடந்த வாரம் போராட்டக்காரகள் மற்றும் சிரியா-ரஷ்யா படைகள் மோதியதால் ஏற்பட்ட அரக்கத்தனமான தாக்குதலுக்கு ஒரே வாரத்தில் 500 அப்பாவி மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பால்மணம் மாறாத குழந்தைகள் என்பது வேதனையான விஷயம்
இந்த தாக்குதலுக்கு கொத்து கொத்தாக பலியான குழந்தைகளின் புகைப்படங்கள் இண்டர்நெட்டில் வெளிவந்துள்ளது. கல்நெஞ்சையும் கரைய வைக்கும் அளவுக்கு இந்த புகைப்படங்கள் அதிர வைத்துள்ளது. இந்த தாக்குதலுக்கு மனித உரிமை கண்காணிப்பகம் தனது கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் இந்த தாக்குதலில் 120 சிறுவர் சிறுமிகள் பலியாகியுள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த போரை உலக நாடுகள் தலையிட்டு உடனே நிறுத்த வேண்டும் என்று பல்வேறு சமூக அமைப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.