மாஸ் என்ட்ரி கொடுப்பேன். ப்ரியாவின் கடைசி பதிவை பார்த்து கண்ணீரில் நனையும் தோழிகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையை சேர்ந்த 17 வயது கால்பந்து வீராங்கனை ப்ரியாவுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்த போது தவறான சிகிச்சை காரணமாக மரணமடைந்தார் என்றும், அதனை அடுத்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து அவருக்கு சிகிச்சை அளித்த இரண்டு மருத்துவர்களை பணி இடைநீக்கம் செய்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ப்ரியாவின் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நஷ்டஈடு வழங்கப்பட உள்ளதாகவும் அவரது சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலை தர இருப்பதாகவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பெரும் கனவுடன் கால்பந்து போட்டியில் சாதிக்க வேண்டும் என்று இருந்த ப்ரியாவின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பிரியாவின் கடைசி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
அந்த ஸ்டேட்டஸில் அவர் கூறியிருப்பதாவது: ”ஆல் ஃப்ரெண்டஸ் அண்ட் ஃபேமலி... நான் சீக்கிரமே ரெடி ஆயிட்டு கம் பேக் கொடுப்பேன். அதனால் எதுக்கும் ஃபீல் பண்ணாதீங்க. என்னோட மாஸ் என்ட்ரி கொடுப்பேன். என்னோட கேம் என்ன விட்டு போகாது. நீங்க நான் திரும்ப வருவேனு நம்பிக்கையா இருங்க. லவ் யூ ஃப்ரண்டஸ் அண்ட் ஃபேமலி’ என்று பதிவு செய்துள்ளார். ப்ரியாவின் இந்த கடைசி ஸ்டேட்டஸ்ஸை பார்த்த தோழிகள் கண்ணீர் மழையில் நனைந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com