கோவிட் தாக்கம்....நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்...?
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பாதிப்பு உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, தினமும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. கோவிட் இரண்டாம் அலை தொற்று ஏற்பட்டவர்களுக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் கடுமையான அறிகுறிகள் இருந்து வருகிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை செயல்பாடுகளையும் செய்து வருகின்றனர். ஆனால் மக்கள் தங்களுடைய உணவுப்பழக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
கொரோனா பாதிக்கப்பட்டிருந்தாலும், சிகிச்சை பெற்று நோய் எதிர்ப்பு சக்தியால் மீண்டு வந்தவர்கள் பலர் இருக்கின்றனர். கொரோனா தாக்கினால் முழுமையாக குணப்படுத்த முடியுமா என நாம் நினைத்து வருந்துவதை விட, நம்மை தற்காத்துக் கொள்ள, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்னென்ன வகை உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
- 1.பால் சார்ந்த பொருள்கள், பப்பாளி, கேரட், மாம்பழம் மற்றும் அசைவமான உணவான ஈரல் உள்ளிட்டவற்றில் வைட்டமின்- சத்து 'ஏ' நிறைந்திருக்கும். இந்த உணவுப்பொருட்களில் தினமும் ஒன்று அல்லது இரண்டை கட்டாயமாக உட்கொண்டு வர வேண்டும்.
- 2.செறிவூட்டப்பட்ட பால், சீஸ், முட்டையின் மஞ்சள் கரு, எண்ணெய் வகைகளில் வைட்டமின் 'டி' சத்து நிறைந்திருக்கும். இந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம். தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் சாதாரண வெப்பத்தில் உள்ள சூரிய வெளிச்சத்தில் நின்றால், உடலுக்கு தேவையான வைட்டமின் டி’யை அது தானாகவே உருவாக்கிக்கொள்ளும்.
- .தக்காளி, நெல்லிக்காய், கொய்யா, குடை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளை பச்சையாகவும் உண்ணலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாளுக்கு சுமார் 500 மிகி வைட்டமின் 'சி' தேவைப்படுவதால், தினமும் ஒரு கொய்யா அல்லது நெல்லிக்கனியை எடுத்துக்கொள்ளலாம். அதாவது ஒரு கொய்யா பழத்தில் மட்டும் 200மிகி-க்கும் அதிகமான வைட்டமின்-சி உள்ளது. அதேபோல் நெல்லியை ஜூஸ் செய்தும், சட்னி அரைத்தும் சாப்பிடலாம். ஆனால் தாளித்து கொதிக்க வைக்கும் போது,வைட்டமின் சி சத்து ஆவியாகிவிடும் என்பதால் அதை தவிர்த்து விடுங்கள்
- 4.தினமும் முருங்கை இலைகளில் ஜூஸ் செய்து குடிக்கலாம்.
- 5.பேரீட்சையில் இரும்புச்சத்து உள்ளது. அதைக்காட்டிலும் முருங்கைக்கீரை, கொள்ளு, கேழ்வரகு, பொட்டுக்கடலை, எள், கறுப்பு கொண்டைக்கடலை, ஓட்ஸ், ஆட்டு ரத்தம் மற்றும் ஈரலில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளதால், இதில் ஏதேனும் ஒரு உணவுப்பொருளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 6.முருங்கைக்கீரை, சீரகம், பட்டை, மஞ்சள்தூள் உள்ளிட்ட உணவுப் பொருட்களில், நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய "ஓரக் வேல்யூ" எனும் தன்மை உள்ளது. எனவே இவற்றை உணவு சமைக்கும் போது சேர்த்து சமைத்து உண்ணலாம். குழம்பு வகைகளில் சீரகம், பட்டைத்தூளையும், கலந்து சமைக்கலாம்.பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிக்கும் போது, வயிற்றில் உள்ள கிருமிகள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- 7.கடலை வகைகள் மற்றும் வாழைப்பழங்களில், வைட்டமின் 'பி-6' சத்து உள்ளதால், இதை தினமும் எடுத்துக்கொண்டால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- 8.சைவ உணவு எடுத்துக்கொள்பவர்கள் பால், பயறு வகைகள், நட்ஸ் வகைகள், சோயாவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட புரதம், பட்டாணியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட புரதம் உள்ளிட்டவற்றை உண்பதற்கு எடுத்துக்கொள்ளலாம். அரிசி மற்றும் பருப்பு சேர்ந்த இட்லி மற்றும் தோசை போன்ற உணவுகளில், புரதச்சத்து கிடைக்கும். முட்டை, நாட்டுக்கோழி உள்ளிட்ட அசைவ உணவுகளிலும் அதிகப்படியான புரதச்சத்து கிடைக்கும்.
- 9.கறுப்பு கொண்டைக்கடலை, மொச்சை, பச்சைப்பயறு, ராஜ்மா போன்ற தானிய வகைகளை, முளைக்கட்டி அல்லது ஊறவைத்து உண்ணலாம். இப்படி செய்யும் போது, அதிலுள்ள பைடேட் (phytate) என்கின்ற ஆன்ட்டி நியூட்ரிஷியன்ஸ் ஃபேக்டர் இன்ஆக்டிவ் மாறுகிறது. இதன் மூலம் நமக்கு ஸிங்க் சத்து கிடைக்கிறது. இதேபோல் பாதாம்,கோதுமை, சாக்லேட்டில் உள்ள கோகோ ஆகியவற்றிலும் ஸிங்க் சத்து உள்ளது.
- 10.கீரைகள், சுண்டல் வகைகள், ஆளிவிதை, வெந்தயம், மீன், வால்நட், உளுந்தங்களி உள்ளிட்ட உணவுகளில் ஓமேகா த்ரீ ஃபேட்டி ஆசிட் உள்ளதால், இதையும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க எடுத்துக்கொள்ளலாம்
- 11.குடல் ஆரோக்கியமாக இருக்க புரோ பயாட்டிக் மற்றும் ப்ரீபயாட்டிக் தேவை. ஓட்ஸ், வாழைப்பழம், வெங்காயம், பூண்டு உள்ளிட்ட உணவுப்பொருட்களில் ப்ரீபயாட்டிக் உள்ளது. இது குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கக்கூடியது. தயிரில் புரோ பயாட்டிக் உள்ளதால், அதையும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு மனிதனுக்கு குடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அதனால் எண்ணெயில் பொரித்த உணவுப்பண்டங்கள், நிறைய நெய், வெண்ணெய் சேர்த்த உணவுகள், டால்டா, மைதா, சர்க்கரை அதிகம் சேர்த்த உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும்.
- 12.முட்டை, காளான், கடல் சிப்பி, பூண்டு, பிரேசில் நட்ஸ் உள்ளிட்டவற்றில் செலினியம் சத்து உள்ளதால், இதையும் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
- 13.தக்காளி ரசம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக் கூடியது. இதில் உள்ள லைகோபீன் தான் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
- 14.தினமும் உணவில் 2 முதல் 4 சிட்டிகை அளவில் கருஞ்சீரகத்தை சேர்த்துக்கொள்ளலாம். சாதம் அதிகமாக உண்பதைவிட காய்கறிகளை கட்டாயமாக அதிகமாக உண்ணவேண்டும்.
- 15.காபி, டீ-க்கு பதிலாக செம்பருத்தி பூவை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அதனுடன் தேன் சேர்த்து குடிக்கலாம்.அதேபோல சாதாரணமாக குடிக்கும் தேநீரில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், லவங்கம் ஆகியவற்றை கலந்து, கொதிக்க வைத்து குடித்தால், உடலில் உள்ள நச்சுத்தன்மை குறைந்து, உடலுக்கு வைட்டமின் சி கிடைக்கும்.
- 16. 3 முதல் 5 துளசி இலைகளை சாப்பிடும் போது, தொண்டையில் உள்ள சளி குறைந்து நோய் எதிர்ப்புத்தன்மை அதிகரிக்கும். குறிப்பாக பாக்கெட்டுகளில் அடைத்துள்ள நொறுக்குத்தீனிகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் உணவுப்பண்டங்களை எடுத்துக்கொள்வது நன்மையே.
கொரோனா மிகவும் அதிகமாக தாக்கி வருவதால், இக்கடுமையான சூழலில் மக்கள் விரதம், டயட் ,லிக்விட் டயட், க்ராஸ் உள்ளிட்டவற்றை பாலோ செய்யக்கூடாது. டயட் இருப்பது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் வெளியில் செல்லுமாறு அரசு மற்றும் ஊடகங்கள் சார்பாக வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout