கொரோனா பாதித்தவர்கள் எந்த வகை உணவுகள் சாப்பிடக்கூடாது....?
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பாதித்தவர்கள் அந்த தொற்றின் தீவிரம் குறையும் வரை குறிப்பிட்ட சில உணவுகளை உண்ணக்கூடாது. இதற்கு காரணம் அந்த வகை உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தி, நோய் எதிர்ப்பு அழற்சி போன்றவற்றை குறைத்து விடும். இதன் காரணமாக வைரஸ் தாக்கம் குறையாமல், பாதிப்பு அப்படியே இருக்கும். பொதுவாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வைட்டமின், மினரல் , ஸிங்க், விட்டமின் சி, விட்டமின் டி உள்ளிட்ட சத்துக்கள் கொண்ட உணவுகளை தர வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். உங்களுடைய உடல்நலத்தை கருத்தில் கொண்டு, கோவிட் பாதிக்கப்பட்டவர்கள் என்னென்ன வகையான உணவுகளை தவிர்க்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
பொட்டல உணவுகள் :
பொட்டலங்களில் அடைத்து வைத்துள்ள உணவுகள் கெடாமல் இருக்க, சர்க்கரை மற்றும் சோடியத்தை அதிகளவில் சேர்த்து விற்பனை செய்கிறார்கள் . இந்த வகை உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும் என்பதால், பொட்டல உணவுகளை கட்டாயம் தவிர்த்தல் நல்லதாகும்.
இறைச்சி :
இறைச்சி வகைகளில் குறிப்பாக சிவப்பு இறைச்சி வகையில் அதிகளவில் கொழுப்பு சத்து இருப்பதால், இவை நோய் எதிர்ப்பு அழற்சிக்கு எதிராக செயல்படக்கூடும். இதனால் கொழுப்பு சத்துள்ள இவற்றை தவிர்த்துவிட்டு, புரோட்டின் வகை உணவுகள் மற்றும் தானிய வகை உணவுகளான பீன்ஸ்,கொட்டை வகைகளை உடலுக்கு எடுத்துக்கொள்வது நல்லதாகும்.
எண்ணெய் வகை உணவுகள் :
நன்கு எண்ணெயில் வறுத்த உணவுப்பொருட்கள் குடலையும் பாதிக்கக்கூடியது, நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கக்கூடியது. இந்தஉணவுப்பொருட்களை எடுத்துக் கொள்ளும் போது நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, இதயமும் பாதிக்கப்படும்.
சர்க்கரை அதிகம் சேர்த்த பானங்கள் :
கார்பனேடட் பானங்கள் மற்றும் அதிகம் சர்க்கரை சேர்ந்த குளிர்பானங்களை கட்டாயம் குடிக்கக்கூடாது. நீர் ஆகாரம் உடலுக்கு தேவைப்படும் பட்சத்தில், இளநீர், பழச்சாறு போன்றவற்றை அருந்தலாம்.
காரசாரமான உணவுகள் :
உடல்நலம் குறைவாக இருக்கும்போது, காரமான உணவுதான் வாய்க்கு பிடிக்கும். ஆனால் அவை செரிமானத்திற்கும், உடலுக்கும் காய்ச்சல் இருக்கும் சமயத்தில் ஏற்றதல்ல. காரமான உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது, தொண்டையில் எரிச்சல் உண்டாகி, வறட்டு இருமல் ஏற்படும். இதனால் பச்சைமிளகாய் சேர்த்து சூப் உள்ளிட்ட உணவுகளை எடுப்பதை தவிர்த்து விடுங்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளை கோவிட் பாதிக்கப்பட்டவர்கள், எடுத்துக்கொள்வதை தவிர்த்து விடவேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout