மாம்பழ பிரியர்களே உஷார்... சோதனையில் சிக்கிய 350 கிலோ கார்பைடு பழங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மாம்பழ சீசன் துவங்கிவிட்டது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கு பிடித்த மாம்பழங்களை கடைகளில் வாங்கி உண்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அவர்கள் கார்பைடு கற்கள் வைத்து பழுக்க வைக்கப்படும், பழங்களும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருவதை அறிவதில்லை.
அரசு சார்பில், உணவு பாதுகாப்பு துறையினர் வருடம் தோறும், கார்பைடு கற்கள் வைத்து பழுக்க வைக்கப்படும், பழங்களை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் சில பழ வியாபாரிகள் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கும் பழங்களை தொடர்ந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கோயம்புத்தூரில் கருப்பன் கவுண்டர் வீதி, பெரிய கடை வீதி, உள்ளிட்ட மார்க்கெட் பகுதிகளில் கார்பைடு கற்கள் மற்றும் அழுகிய பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, உணவு பாதுகாப்பு துறை அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகா தலைமையிலான குழுவினர் அங்குள்ள அனைத்து பழக்கடைகளிலும் அதிரடி சோதனையிட்டனர். அதில் 350 கிலோ கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மற்றும் ஆரஞ்சு பழங்கள் சிக்கியது.
அவற்றை ரசாயனங்கள் மூலம் உடனடியாக அழித்தனர். மேலும் தொடர்ந்து இதுபோல் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பழங்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments