பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல கிராமிய பாடகர்: பரபரப்பு தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தாலும் நேற்றும் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட தகவல்களாக இருக்கின்றன.

ஏற்கனவே ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆஜித், கேப்ரில்லா ஆகியோர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பிரபல பின்னணிப் பாடகரும் கிராமிய பாடகருமான வேல்முருகன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் என கூறப்படுகிறது. பிக்பாஸ் இரண்டாம் சீசனில் ஆனந்த வைத்தியநாதன், மூன்றாவது சீசனில் மோகன் வைத்யா ஆகிய பாடகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் தற்போது நான்காம் சீசனில் பாடகர் வேல்முருகன் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

’சுப்பிரமணியபுரம்’ படத்தில் இடம்பெற்ற ’மதுர குலுங்க குலுங்க’ ’நாடோடிகள்’ படத்தில் இடம்பெற்ற ’ஆடுங்கடா’ ’ஆடுகளம்’ படத்தில் இடம்பெற்ற ’ஒத்த சொல்லால’ உள்பட பல கிராமிய திரைப்பாடல்கள் பாடி இசை ரசிகர்களை கவர்ந்தவர் வேல்முருகன் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான தனுஷின் ’அசுரன்’ படத்தில் கூட ’கத்தரி பூவழகி’ என்ற பாடலை இவர் பாடியுள்ளார் என்பது தெரிந்ததே.

More News

போறபோக்குல விளையாட்டா… 2021 கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சில வித்திரங்கள்!!!

2021 ஆம் ஆண்டிற்கான கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர்களின் பட்டியல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

ஓவியாவின் காலை சுற்றிய பாம்பு: வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது தொடங்கவிருக்கும் நிலையில் பிக்பாஸ் என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது முதலாவது சீசனின் போட்டியாளரான ஓவியா தான். 

கவினிடம் ஏற்பட்ட அட்டகாசமான மாற்றம்: சமூக வலைத்தளங்களில் வைரல்!

தொலைக்காட்சி தொடரில் நடித்து அதன்பின் பெரிய திரையிலும் நடிகரான நடிகர் கவின், பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3வது சீஸனில் கலந்து கொண்டு இளைஞர்களின் ஹீரோ என புகழப்பட்டார்.

மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களில் அரசியல் செய்ய வேண்டாம்… தமிழக முதல்வர் வேண்டுகோள்!!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தைக் குறித்து தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் கடும் விவாதங்களை எழுப்பி வருகிறது.

எகிப்து சுடுகாட்டில் 2,500 ஆண்டு பழமையான ஈமப்பெட்டிகள்? நூற்றாண்டுகளை கடந்து வாழும் நாகரிகம்!!!

எகிப்து தலைநகர் கெய்ரோவில் 2,500 ஆண்டு பழமையான ஈமப்பேழைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.