ரூ.20 லட்சம் கோடி யார் யாருக்கு? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது, ‘இந்தியாவின் பொருளாதார தேக்க நிலையை சரிசெய்ய 20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நிதியமைச்சர் இந்த பொருளாதார மீட்டமைப்பு திட்டம் குறித்து தெளிவாக விவரிப்பார் என்றும், நடுத்தர குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியவைகளில் முக்கிய அம்சங்கள்:
பொருளாதாரம், மக்கள் வளம், கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் தேவை-சப்ளை ஆகிய ஐந்து தூண்களின் அடிப்படையில் இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது. சுய சார்பு பாரதம் என்பது பிற உலக நாடுகளில் இருந்து இந்தியாவின் உறவை துண்டிப்பது என்பதல்ல
ஊரடங்கால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அரசு உணர்ந்துள்ளது. ரூ. 20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும்
ஏழைகளுக்கு உதவுவதற்காக ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு சுகாதார ஊழியருக்கும் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகையை பன்முகத்தன்மை கொண்ட யோஜனா வழங்கியுள்ளது
15 திட்டங்களில், 6 திட்டங்கள் சிறு குறு தொழில் துறைக்கானது. அக்டோபர் மாதம் வரை 3 லட்சம் கோடி மதிப்பிலான கடன் வழங்கப்படும். கடன் பெறும் சிறு குறு நிறுவனங்கள் முதல் 1 ஆண்டுக்கு கடனை திருப்பி செலுத்த தேவையில்லை
RERA-வின் கீழ் பதிவு செய்த ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கட்டுமானத்தை முடிக்க வேண்டியதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
சிறப்பு திட்டம் மூலம் 2 லட்சம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறுவார்கள். சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி மதிப்பிலான துணை கடன் வழங்கப்படும். புதிய கடன் வசதியைப் பெற சொத்துப்பத்திரங்கள் போன்ற பிணை எதையும் தரத் தேவையில்லை. ஏற்கனவே கடன் பெற்று செலுத்த முடியாமல் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் இதற்கு தகுதியானவர்கள்
குறு தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நடுத்தர தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது
சிறு மற்றும் குறு நிறுவனங்கள் உலக அளவிலான டெண்டர்கள் மூலம் பாதிக்கப்படுகின்றன. எனவே இனி 200 கோடி வரை உலக அளவிலான டெண்டர்கள் முறை கைவிடப்படும்
தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியில், தொழிலாளர் பங்குத் தொகையில் ஒரு பகுதியை அரசு செலுத்தும். வருங்கால வைப்பு நிதியில், தொழிலாளர் பங்குத் தொகையில் ஒரு பகுதியை அடுத்த 3 மாதங்களுக்கு அரசு செலுத்தும்
இவ்வாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments