கரைபுரளும் வெள்ளத்தால் பாலம் அடித்துச் செல்லும் கோரம்… அதிர்ச்சி வீடியோ!
- IndiaGlitz, [Wednesday,August 04 2021]
மத்தியப்பிரதேசம் மாநிலம் சிந்து ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அங்குள்ள இரண்டு பெரிய பாலங்கள் இடிந்து வெள்ளத்தோடு வெள்ளமாக அடித்துச் செல்லும் காட்சி பலரையும் அச்சமடைய செய்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் சிவபுரி, ஷியோப்பூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக 800 மி.மீட்டர் அளவிற்கு கனமழை பொழிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிந்து ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. எனவே சிவபுரி மாவட்டத்தில் உள்ள அடல் சாகர் எனும் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
இந்த நீரானது சிவபுரி, ஷியோப்பூர், ரத்தன்நகர், குவாலியர், சம்பல் எனும் பல்வேறு பகுதிகளில் பெருக்கெடுத்து ஒடி அங்குள்ள பாலங்களையும் நீர்ப்பிடிப்பு நிலையங்களையும் சேதப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் ரத்தன்நகர் பகுதியில் உள்ள 2 பெரிய பாலங்கள் பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தில் மூழ்கிய காட்சி பலரையும் அச்சமடைய வைத்திருக்கிறது. இந்தக் காட்சி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.