கொரோனா ஊரடங்கு எதிரொலி: சினிமா ரசிகர்களுக்கு புதிய வகை தியேட்டர் ஏற்பாடு!

  • IndiaGlitz, [Friday,July 17 2020]

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும், ஒரு சில நாடுகளில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட போதிலும் போதுமான ரசிகர்களை திரையரங்குக்கு வராததால் மீண்டும் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் நதியில் மிதக்கும் தியேட்டர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பாரீஸ் பிளேஜஸ்’ என்ற நிகழ்ச்சி அங்குள்ள சீன் என்ற ஆற்றில் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் இந்த ஆற்றின் நதிக்கரையில் கொண்டாட்டங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு வித்தியாசமாக மிதக்கும் தியேட்டர் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து பிரான்ஸ் நாடு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில் சினிமா ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் இந்த மிதக்கும் தியேட்டர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எம்கே2 என்ற சினிமா நிறுவனம் அமைத்துள்ள இந்த தியேட்டரில் நதிக்கரையில் ஸ்க்ரீன் வைக்கப்பட்டுள்ளது. அதை அந்த நதியில் உள்ள படகுகளில் உட்கார்ந்து கொண்டு திரைப்படத்தை பார்த்து ரசிக்கலாம்

சுமார் 38 படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதும் ஒவ்வொரு படகிலும் நான்கு முதல் ஆறு பேர் அமர்ந்து திரைப்படம் பார்க்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் படகில் உட்கார்ந்து இருப்பவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது நண்பர்களாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். மேலும் கரையிலிருந்து திரைப்படத்தை பார்க்க விரும்புவோர்களுக்கு நாற்காலி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தியேட்டர் மக்களிடையே வரவேற்பைப் பெற்றால் நிரந்தரமாக வைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

கொரோனாவால் வேலையிழப்பு: முறுக்கு வியாபாரம் செய்யும் பேராசிரியர்

கொரானா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பலர் வேலையை இழந்து வருமானத்தை இழந்துள்ள நிலையில் தற்போது கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் தனது

கொரோனா நேரத்தில் பப்புவா நியூ கினியாவுக்கு இப்படியொரு சோதனையா??? பரபரப்பு தகவல்!!!

இந்தோனேசியாவிற்கு அருகில் இருக்கும் ஒரு தீவு பப்புவா நியூ கினியா. அத்தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

வட்டியும் முதலும் சேர்த்துக் கொடுத்துடுறேன்… விஜய் மல்லையாவின் புது டெக்னிக்!!!

இந்தியப் பொதுத்துறை வங்கிகளிடம் வட்டிக்குக் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா

திரையரங்குகளுக்கு தளர்வுகள் எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக நாடு முழுவதும் பல்வேறு தொழில் முடங்கப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது

விழிப்படைவோம்! பெரியார் சிலை அவமதிப்பு குறித்து பா.ரஞ்சித்

இன்று காலை கோவை மாவட்டம் சுந்தராபுரம் என்ற பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவிச்சாயம் ஊற்றி அவமதிப்பு செய்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.