இந்தியாவில் விமான சேவை தொடங்கும் தேதிகள் அறிவிப்பு
- IndiaGlitz, [Saturday,April 18 2020]
இந்தியாவில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை முதல்கட்ட ஊரடங்கும், ஏப்ரல் 15 முதல் மே 3ஆம் தேதி இரண்டாம் கட்ட ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் சொந்த ஊரில் இருந்தும் சொந்த நாட்டில் இருந்து வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் திரும்ப முடியாமல் சிக்கலில் உள்ளனர்.
இந்த நிலையில் மே 3ஆம் தேதி இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருவதை அடுத்து மே 4 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. அதேபோல் ஜூன் 1 ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் என்றும் ஏர் இந்தியா அறிவிப்பு செய்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் ரயில் சேவையும் தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வரும் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்படும் என கூறப்பட்ட நிலையில் மே 4 முதல் இந்தியாவுக்குள்ளும், ஜூன் 1 முதல் வெளிநாட்டு விமானப் போக்குவரத்தும் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.