அஜித்துடன் புகைப்படம் எடுத்து கொண்ட விமான பணிப்பெண்: என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,April 08 2022]

அஜித் நடிக்கவிருக்கும் 61 வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படத்திற்காக சென்னை அண்ணாசாலை செட் தயார் நிலையில் உள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் விரைவில் ‘அஜித் 61’ படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் நிலையில் படக்குழுவினர் ஏற்கனவே ஐதராபாத் சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று அஜீத்தும் ஐதராபாத்துக்கு விமானத்தில் சென்ற நிலையில் விமான நிலையத்தில் ஒருசிலர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலானது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் விமான பணிப்பெண் ஒருவர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ’என்ன ஒரு பெர்சனாலிட்டி. முழுக்க முழுக்க எளிமையானவர். தமிழ் சினிமாவின் அழகான நடிகர். அவருடன் விமானத்தில் பறந்தது மறக்க முடியாதது. அவருடைய மென்மையான புன்னகையும் கனிவான நடத்தையும் மறக்கவே முடியாது’ என்று கூறியுள்ளார்.

More News

சூர்யா அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ்: இணையதளங்களில் வைரல்!

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 41' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவரது தயாரிப்பில் உருவான 'ஓ மை டாக்' என்ற படம் ஏப்ரல் 21ஆம் தேதி

'மணி ஹெய்ஸ்ட்', 'கூர்கா' படங்களின் காப்பியா  'பீஸ்ட்'? நெல்சன் விளக்கம்

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தின்  டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த ட்ரைலரை வைத்து, 'மால் ஒன்றை தீவிரவாதிகள் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து,

'பீஸ்ட்' தாக்கம் எதிரொலி: 'கே.ஜி.எப் 2' படத்திற்கு இவ்வளவு தியேட்டர்கள் தானா?

தளபதி விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' மற்றும் யாஷ் நடித்துள்ள 'கே.ஜி.எப் 2' ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாட்களில் ஐந்து மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

'பீஸ்ட்' படத்திற்காக முதல்வருடன் விஜய் இருக்கும் கட்-அவுட்: என்ன குறியீடு?

தளபதி விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்'  திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக பேனர்கள் வைப்பதில் விஜய் ரசிகர்கள் தீவிரமாக இருக்கும்

'தளபதி 66' படத்தில் இருந்து திடீரென விலகிய இயக்குனர்: என்ன காரணம்?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 66' திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது என்பதும் ஒரு சில காட்சிகளும் படமாக்கப்பட்டது என்பது தெரிந்ததே.