கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்ட படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா: படப்பிடிப்பு ரத்து

  • IndiaGlitz, [Monday,April 19 2021]

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்ட படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட 5 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. முதல் முறையாக மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்வதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

’சர்காரு வாரி பாட்டா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் தொடங்கியது. படப்பிடிப்பு தொடங்கு முன் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் படப்பிடிப்பு தளத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அறிந்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகள் வீதி அடைந்ததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா என்ற தகவல் தெலுங்கு திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

More News

கனி வீட்டுக்கு சென்று 'காரக்குழம்பு' சாம்பிட்ட சிம்பு: வைரல் புகைப்படம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான கனியின் வீட்டுக்கு சிம்பு, ரக்‌ஷன் மற்றும் மகத் சென்று கார குழம்பு சாப்பிட்டதன் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 

தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வரும் கொரோனா ஊரடங்கு விதிமுறைகள்!

கொரோனா பரவலை தடுக்கும் விதமாககத் தமிழக முழுவதும் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

நடிகை சமந்தாவின் லேட்டஸ் லுக்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.

டெல்லியில் முழு ஊரடங்கு....! முதல்வர் அதிரடி அறிவிப்பு...!

கொரோனா தீவிரமாக பரவி வருவதால், தலைநகரான டெல்லியில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல்....! பிரச்சாரத்தை ரத்து செய்த மம்தா...!

கொரோனா தீவிரமாய் பரவி வருவதால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மேற்கு வங்கத்தின் முதல்வருமான மம்தா பேனர்ஜி,