தீ விபத்தில் இருந்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் காப்பாற்றிய 5 வயது சிறுவன்

  • IndiaGlitz, [Friday,February 14 2020]

ஜார்ஜியா நாட்டில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அந்த வீட்டில் இருந்த 5 வயது சிறுவன் அந்த வீட்டில் உள்ள எட்டு பேர்களை புத்திசாலித்தனமாக காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்ஜியா நாட்டில் பார்டோவ் கண்ட்ரி என்ற இடத்தில் ஒரு வீட்டில் மொத்தம் ஒன்பது பேர் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று திடீரென நள்ளிரவில் அந்த வீட்டில் தீ விபத்து நேர்ந்தது. இதனால் ஏற்பட்ட புகையினால் திடீரென கண்விழித்த 5 வயது சிறுவன் உடனடியாக எந்தவித பதட்டமும் பயமும் இன்றி தனது இரண்டு வயது தங்கையை ஜன்னல் வழியாக வெளியே தூக்கி எறிந்தான்.

அதன் பின்னர் பக்கத்து அறையில் உள்ள தனது மாமா மற்றும் அத்தை இடம் தீ விபத்து குறித்து கூறினான். உடனடியாக அவர்கள் இருவரும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களை எழுப்பி வீட்டை விட்டு வெளியேறி உதவி செய்தனர்.

5 வயது சிறுவனின் சமயோசித புத்திசாலித்தனத்தால் அந்த வீட்டில் உள்ள 9 நபர்களும் எந்தவிதமான தீக்காயமும் இன்றி காப்பாற்றப்பட்டார்கள். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் அந்த சிறுவனைப் பாராட்டி வருகின்றனர். தன்னையும் தனது குடும்பத்தில் உள்ள 8 பேர்களையும் தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய ஐந்து வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

உத்திர பிரதேச சட்ட சபைக்கு கேஸ் சிலிண்டருடன் வந்த சமாஜ் வாதி எம்எல்ஏ க்கள்

உத்திரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது

பறந்துகொண்டிருக்கும் விமானத்தை மின்னல் தாக்கும், வைரல் வீடியோ..!

பறந்து கொண்டிருக்கும் விமானம் ஒன்றை மின்னல் கீற்று தாக்கும் வீடியோ காட்சி சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது.

தனுஷ் செய்த உதவிக்காக நன்றி கூறிய சிம்பு பட இயக்குனர்!

சிம்பு நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது  பிரபுதேவா நடித்து வரும் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

பப்ஜிக்கு அடிமையாகி பணத்திற்காக பாட்டியை கொன்ற சென்னை இளைஞர் கைது!

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் பாட்டியை கொலை செய்த 20 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர் 

தம்பி முறை உள்ளவருடன் கள்ளக்காதல்: 4 குழந்தைகளை தவிக்கவிட்டு ஓடிய இளம்பெண்

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சோ.குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வைத்தீஸ்வரி என்பவருக்கும்