5 வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள்.. பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐந்து வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவத்தில் சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சியின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் என்ற பகுதியில் தந்தை காவலாளியாக பணிபுரியும் வளாகத்திற்கு 5 வயது சிறுவன் சென்று கொண்டிருந்தான். அந்த சிறுவனின் கையில் சில உணவுப் பொருள்கள் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் அந்த சிறுவனை நோக்கி 3 நாய்கள் ஓடி வந்து சிறுவனை சூழ்ந்து கடித்து குதறுகின்றன. குழந்தை ஓட முயற்சித்த போதும் நாய்கள் சிறுவனை தரையில் தள்ளி கால்களை பிடித்து இழுத்து செல்லும் காட்சிகள் அந்த சிசிடிவி வீடியோவில் உள்ளது. சில நிமிடங்களில் அந்த சிறுவன் இறந்துவிட்டதாக தெரிகிறது.
இந்த சம்பவம் தெருநாய்கள் குறித்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே பல பகுதிகளில் வெறி நாய்கள் கடித்து மனிதர்கள் இறந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் குஜராத் மாநிலத்தில் சூரத்தில் நான்கு வயது சிறுவன் தெரு நாய்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்த நிலையில் தற்போது தெலுங்கானாவில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இதனை அடுத்து தெரு நாய்கள் தொடர்பாக அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
#hyderabad dog bite pic.twitter.com/mJkKOnaof3
— Sai vineeth(Journalist🇮🇳) (@SmRtysai) February 21, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com