பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக செல்லும் 5 போட்டியாளர்கள்.. யார் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இதுவரை ரவீந்தர், அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா ஆகிய மூன்று பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், தீபாவளி தினத்தில் ஐந்து போட்டியாளர்கள் உள்ளே செல்வதாக கூறப்படுகிறது.
அவர்கள் ஏற்கனவே வெளியேறிய அர்னவ் முன்னாள் தலைவி திவ்யா, குக் வித் கோமாளி ஷாலின் ஜோயா, விஜய் டிவியின் டிஎஸ்கே, பாடகி ஸ்வாகதா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் என கூறப்படுகிறது.
ஏற்கனவே ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்ட நிலையில், டி எஸ் கே தவிர மற்ற அனைவரும் பெண்களாக இருப்பதால் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்க இந்த வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உதவுவார்கள் என்றும், உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் உறுதியை சோதிக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே 15 போட்டியாளர்கள் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக 5 போட்டியாளர்கள் சேர்ந்து மொத்தம் 20 போட்டியாளர்கள் இருப்பதால், நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்குவது போல் இருக்கிறது என்று பிக் பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com