இனி 5 வகையான சென்சார் சான்றிதழ்.. மத்திய தணிக்கை குழு அறிவிப்பு..!
- IndiaGlitz, [Sunday,November 17 2024]
மத்திய தணிக்கை குழு புதிய முறையில் திரைப்படங்களுக்கு சான்றிதழ்களை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்போது மத்திய திரைப்பட தணிக்கை குழு திரைப்படங்களுக்கு யு, ஏ மற்றும் யுஏ என மூன்று வகை சான்றிதழ்களை வழங்கி வருகின்றது. ஆனால் இனி, யு, ஏ, யுஏ7+, யுஏ13+, யுஏ16+ என 5 பிரிவுகளின் கீழ் சான்றிதழ்கள் வழங்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யு வகை படங்கள் அனைவரும் பார்க்க ஏற்றதாகவும், யூஏ வகை படங்கள் திகில், மர்மம் போன்ற படங்கள் என்பதால் பெற்றோர் துணையுடன் பார்க்க ஏற்றதாகவும், ஏ சான்றிதழ் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கும் அடல்ட் படங்களாகவும் இருக்கும்,
அதேபோல, 7, 13, 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு யுஏ7+, யுஏ13+, யுஏ16+ என அந்தந்த வயதுக்கு ஏற்றவர்கள் பார்க்கும் வகையில் திரைப்படங்களுக்கு சான்றிதழ் கிடைக்கும்.
ஒரு படத்தை குழந்தைகள் பார்க்க ஏற்றதா இல்லையா என்பதை பெற்றோர் தீர்மானிக்க முன், அந்த படத்தின் சான்றிதழ் விவரத்தை தெரிந்து கொள்வது அவசியம். இதற்காக cbfcindia.gov.in என்ற இணையதளத்தை பார்வையிட வேண்டும் என மத்திய தணிக்கை குழு அறிவுறுத்தியுள்ளது.