close
Choose your channels

5 தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் கைது! திரையுலகினர் மகிழ்ச்சி

Thursday, March 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

5 தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் கைது! திரையுலகினர் மகிழ்ச்சி

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் 5 பேர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஒருதிரைப்படம் ரிலீஸ் ஆகி ஒருசில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டு தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்தி வந்தது

இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் அட்மின்களை கூண்டோடு பிடிக்க போலீசார் கடந்த சில மாதங்களாக தீவிர முயற்சியில் இருந்தனர். இந்த நிலையில் தான் தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் 5 பேரை கேரள கிரைம் பிரான்ச் ஆண்டி பைரசி செல் சூப்பர்டென்ட் B.K. பிரஷாந்த் காணி தலைமையிலான குழு  நேற்று திருநெல்வேலியில் கைது செய்தது.

பைரசி வேலைகளில் ஈடுபட்டு வந்த இந்த ஐந்து பேரும் 19 டொமையின்களிலிருந்து மாறி மாறி இந்த வேலையை செய்துவந்தனர். ஒரு விளம்பர ஏஜன்சியிடம் இவர்கள் தொடர்பில் இருப்பதை அறிந்து இவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார் ஐந்து பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரின் பெயர் கீழ்வருமாறு

1. கார்த்தி வயது 24 ( விழுப்புரம் )
2. சுரேஷ் வயது 24
3. TN Rockers பிரபு வயது 24
4. DVD Rockers ஜான்சன் வயது 30 ( திருநெல்வேலி )
5. மரிய ஜான் வயது 22.

இவர்கள் Tamil Rockers.IN , Tamil Rockers.AC , Tamil Rockers.NE , Tamil Rockers.CO , Tamil Rockers.IS , Tamil Rockers.US , Tamil Rockers.RO போன்ற 19 Domainகளை பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment