விஷ்ணுவை வச்சு செய்யும் விஜய் வர்மா.. 5 ஸ்டாருக்கான ஆவேசமான வாதம்..!

  • IndiaGlitz, [Friday,December 08 2023]

பிக் பாஸ் வீட்டில் தற்போது 5 ஸ்டார்களுக்கான டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் அந்த ஸ்டார்களை கைப்பற்ற போட்டியாளர்கள் குழு தீவிரமாக விளையாடி வருகிறது. விஷ்ணு, விஜய் வர்மா, அர்ச்சனா, ரவீனா, மணி, ரட்சிதா, நிக்சன், விஷ்ணு, விக்ரம் சரவணன் உள்ளிட்ட ஒரு சிலர் இந்த டாஸ்க்கில் விளையாடுகின்றனர்.

குறிப்பாக இந்த டாஸ்க்கில் தரப்படும் 5 ஸ்டார்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதை விட யாருக்கு போகக்கூடாது என்ற வாதத்தை தான் தற்போது முன்வைத்து வருகின்றனர்.

இந்த ஐந்து ஸ்டார்கள் குறித்து விஷ்ணு ஒரு சில கருத்துக்களை தெரிவிக்கிறார். அவர் விசித்ராவுக்கு அந்த ஸ்டார் கிடைக்க கூடாது என பேசுகிறார். இதனை அடுத்து விஜய் வர்மா ஆவேசமாக ’இவளெல்லாம் ஒரு பெண்ணாடா’ என்று தரக்குறைவாக பேசிய விஷ்ணு இந்த கேமுக்கு தகுதி இல்லாதவர் என்று கூற அதற்கு ’வைல்டு கார்டில் நீ எல்லாம் பேசக்கூடாது என்று விஷ்ணு பதிலடி கொடுக்கிறார்.

எந்த காரணத்தை முன்னிட்டு விஷ்ணுவுக்கு ஐந்து ஸ்டார்கள் சென்று விடக்கூடாது என்பது விஜய் வர்மாவின் ஆவேசமான பேச்சிலிருந்து தெரிய வருகிறது. இதனையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கும்? யாருக்கு அந்த ஐந்து ஸ்டார்கள் கிடைக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.