உதயநிதிக்கு நன்றி தெரிவித்த அருள்நிதி பட தயாரிப்பாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அருள்நிதி நடித்த ’டைரி’ என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன், உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அருள்நிதி நடிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவான ’டைரி’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. இந்த படத்தின் த்ரில் காட்சிகள் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
’டைரி’ திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பு மற்றும் திரையரங்கு வட்டாரங்களிலிருந்து கிடைத்த பாசிட்டிவ் வசூல் நிலவரம் எங்களை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. எங்கள் நிறுவனத்தின் பெருமைமிகு படைப்பாக ’டைரி’ உள்ளது. பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா படங்களுக்கு பிறகு இந்த படம் மிகப் பெரிய வெற்றி படமாக எங்கள் தயாரிப்பில் உருவாகி உள்ளது.
பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் நடிகர் அருள்நிதி, அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன், ஒளிப்பதிவாளர் அரவிந்த்சிங் இசையமைப்பாளர் ரான் எதான் யோஹான் மற்றும் இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர் எங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
மேலும் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த படத்தை அவர் தனது பெருமைமிகு ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலம் தமிழகம் முழுவதும் வெளியிட்டதால் தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது.
அதேபோல் எங்களது சாட்டிலைட் பார்ட்னர் கலைஞர் டிவி, டிஜிட்டல் பார்ட்னர் ஆஹா தமிழ் மற்றும் ஹரிஹரன் மியூசிக் நிறுவனங்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் அனைத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் ஆன்லைன் போர்ட்டல்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
A joyful thank you note from team #Diary #DiaryInTheatres pic.twitter.com/J8Cr5gFfwW
— Five Star Creations LLP (@5starcreationss) August 29, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com