ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் மீண்டும் இணைந்த இயக்குனர்.. சூப்பர் தகவல்..!

  • IndiaGlitz, [Friday,June 09 2023]

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் இயக்குனர் இன்னாசி பாண்டியன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவான ’டைரி’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் மீண்டும் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மற்றும் இன்னாசி பாண்டியன் ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபைவ் ஸ்டார் புரொடக்ஷன் நிறுவனத்தின் 12 வது திரைப்படமான இந்த படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ள நிலையில் இந்த படமும் ’டைரி’ படம் போலவே ஒரு திரில்லர் கதை அம்சம் கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ’ஜிகர்தண்டா 2’ என்ற படம் உருவாகியுள்ளது என்பதும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

More News

பிரபாஸ் ராமர் மாதிரியே இல்லை.. தமிழ் நடிகையின் பதிவால் பரபரப்பு..!

பிரபாஸ் நடித்த 'ஆதிபுருஷ்' என்ற திரைப்படம் வரும் 16ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை நாடு முழுவதும் படக்குழுவினர் புரமோஷன் செய்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 21' படத்தில் இணைந்த 'மாஸ்டர்',  'கைதி', நடிகர்..!

விஜய் நடித்த 'மாஸ்டர்', 'சர்கார்', மற்றும் கார்த்தி நடித்த 'கைதி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'எஸ்கே 21' படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

செர்பியாவில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்த ‘சிட்டாடல்‘ டீம்… வைரல் புகைப்படங்கள்!

நடிகை சமந்தா, பாலிவுட் நடிகர் வருண் தவான் ஆகியோர் இணைந்து தற்போது இந்தி ‘சிட்டாடல்’ வெப் தொடரில் நடித்து வரும் நிலையில் அந்தப் படக்குழுவினர் செர்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த

25 வருடங்களுக்கு முன் அஜித், விஜய் படத்தில் நடித்த நடிகை.. கணவர் குழந்தையுடன் க்யூட் புகைப்படங்கள்..!

 25 வருடங்களுக்கு முன் அஜித், விஜய் படங்களில் நடித்த நடிகை தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

17 வயதில் கர்ப்பம் அடைவது இயல்புதான்… குஜராத் நீதிமன்றம் வழங்கிய சர்ச்சையான தீர்ப்பு!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருவர் கர்ப்பம் அடைந்த நிலையில் அதைக் கலைப்பதற்கு ஒப்புதல் கோரி அவரது பெற்றோர் தாக்கல்