பெண் காவலர்கள் நலனுக்காக கடலூரில் புது திட்டம்! குவியும் பாராட்டு!
- IndiaGlitz, [Wednesday,February 17 2021]
பாலின வேறுபாட்டை கடந்து தற்போது பல சமூக நலத்துறைகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் காவல் துறையிலும் பெண்கள் பல சாதனைகளைப் படைத்து வருகின்றனர். இந்நிலையில் பெண் காவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் சானிடைசர் வெண்டிங் மெஷின் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.
இதன்படி கடலூரில் மாவட்ட காவல் அலுவலகம், ஆயுதப்படை வளாகம் என 46 காவல் நிலையங்கள் மற்றும் 6 மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து காவல் நிலைம் அதோடு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் இடங்கள் என ஒட்டு மொத்தமாக 65 இடங்களில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
கடலூர் மாவட்ட எஸ்.பி.அபினவ் துவக்கி வைத்துள்ள இத்திட்டத்தின்படி 5 ரூபாய் நாணயத்தை வெண்டிங் மெஷினில் செலுத்தி தேவையானபோது சானிடைசர் நேப்கினை பெற்றுக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடலூர் மாவட்டத்தில் முதன் முதலாகத் துவக்கப்பட்டு உள்ள இத்திட்டம் அனைத்து பெண் காவலர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.