முதல்வர் வங்கிக் கணக்கில் கைவைத்த பலே திருடங்கள்!!! 5 பேர் கைது மற்றும் பரபரப்பு சம்பவம்!!!

  • IndiaGlitz, [Tuesday,September 01 2020]

 

அசாம் மாநிலத்தில் முதல்வர் நிவாரணநிதி வங்கிக் கணக்கில் இருந்து 3.30 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பாக உத்திரபிரதேசத்தைச் சார்ந்த 5 பேரை அசாம் போலீஸார் கைது செய்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல்வர் நிவாரண நிதியைப் பெறுவதற்காக அனைத்து மாநில முதல்வர்களின் பெயர்களிலும் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு இருக்கும். இந்தக் கணக்கிற்கு பொதுமக்கள் பேரிடர் சமயங்களில் நன்கொடைகளை வழங்குவது வழக்கம். அந்த வகையில் எப்பொழுதும் முதல்வர் நிவாரண நிதிக்காக உருவாக்கப்பட்ட வங்கிக் கணக்கில் ஏராளமான பணம் குவிந்து கிடக்கும்.

பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இந்த வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தலாம். ஆனால் இந்த வங்கிக் கணக்கில் இருந்து முதல்வரின் கையொப்பம் இல்லாமல் பணத்தை எடுக்க முடியாது. தற்போது முதவரின் கையெழுத்தை போர்ஜரி செய்துபோட்டு அதன்மூலம் 3.30 லட்சம் கொள்ளை அடித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 10 ஆம் தேதி முதல்வரின் நிவாரண நிதிக்கணக்கில் இருந்து சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநிலத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதை விசாரித்த போலீஸார் உத்திரபிரதேசத்தை சார்ந்த 5 பேர் முதல்வரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்த விவரம் தெரிய வந்துள்ளது. தற்போது அந்த 5 பேரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.