ஒரே தொகுதியில் ஐந்து ஓபிஎஸ் போட்டி.. ஒரிஜினல் ஓபிஎஸ்-க்கு வந்த சோதனை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இணைந்து ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதும் அவர் சமீபத்தில் தான் வேட்புமனு தாக்கல் செய்தார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் அவருக்கு பெரும் சோதனையாக அவருடைய பெயரிலேயே மேலும் நான்கு பேர்கள் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வேட்பாளர் என்பதை அறிந்த அவருக்கு பிடிக்காத சிலர், அவரது பெயரில் உள்ள நான்கு பேர்களை போட்டியிட வைத்துள்ளதாகவும் அந்த நான்கு பேர்களும் அதே ராமநாதபுர தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து ராமநாதபுரம் தொகுதியில் ஓ பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட ஐந்து பேர் சுயேட்சையாக போட்டியிடுவதால் ஒரிஜினல் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு கிடைக்கும் சின்னத்தை பொருத்து, அந்த சின்னத்தை அவர் எந்த அளவுக்கு வாக்காளர்கள் மத்தியில் சேர்க்கிறார் என்பதை பொருத்து தான் அவரது வெற்றி உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது .
பன்னீர்செல்வம் என்ற பெயர் பொதுவானதாக இருந்தாலும் ஓ பன்னீர்செல்வம் என்ற இனிசியலுடன் சேர்ந்த பெயர் என்பது அரிதாக இருக்கும் நிலையில் அவரது இன்ஷியிலேயே கொண்ட நான்கு பன்னீர்செல்வம் பெயர் கொண்டவர்களை கண்டுபிடித்து போட்டியிட வைத்திருப்பது தான் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட வாக்காளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com