அக்டோபர் 11ல் ரிலீஸ் ஆகும் 5 படங்களில் 2 த்ரில் படங்கள்

  • IndiaGlitz, [Friday,September 27 2019]

கோலிவுட் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக திகில் படங்கள் அதிகம் தயாராகிவரும் நிலையில் வரும் அக்டோபர் 11-ம் தேதி ரிலீஸாகும் 5 படங்களில் மூன்று படங்கள் திகில் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது

வரும் அக்டோபர் 15-ஆம் தேதி சுந்தர் சி நடித்த ’இருட்டு’, சித்தார்த் நடித்த ’அருவம்’, தமன்னா நடித்த ’பெட்ரோமாக்ஸ்’ வருண் நடித்த ’பப்பி மற்றும் ‘மிக மிக அவசரம்’ ஆகிய ஐந்து படங்கள் வெளியாக உள்ளது

இதில் துரை இயக்கத்தில் சுந்தர் சி நடித்த ’இருட்டு’திரைப்படமும் அறிமுக இயக்குனர் சாய்சங்கர் இயக்கத்தில் சித்தார்த் நடித்த ’அருவம்’திரைப்படமும்,’அதே கண்கள்’ பட இயக்குனர் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா நடித்த ’பெட்ரோமாக்ஸ்’ திரைப்படமும் திகில் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது முன்னதாக ’பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தீபாவளி தினத்தில் தளபதி விஜய்யின் ’பிகில்’ மற்றும் கார்த்தியின் ‘கைதி’ ஆகிய இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதால் ’பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம் முன்கூட்டியே அக்டோபர் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரண்டு அல்லது மூன்று படங்கள் ரிலீசாகி வரும் நிலையில் அக்டோபர் 11-ஆம் தேதி 5 திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. இதில் எத்தனை படங்கள் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ரூ.10 கோடி விவகாரம்: ஞானவேல்ராஜாவுக்கு கமல்ஹாசன் பதில்!

'உத்தம வில்லன்' திரைப்படம் வெளியாகும்போது ஏற்பட்ட பொருளாதார சிக்கலை சரிசெய்ய கமல்ஹாசன் தன்னிடம் ரூ.10 கோடி பெற்றதாகவும், அதற்காக தனது நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடித்து தருவதாக கமல்

சென்னை திரும்பினார் சிம்பு! அடுத்த அதிரடி எப்போது?

கடந்த சில வாரங்களாக தாய்லாந்து நாட்டில் படப்பிடிப்பு மற்றும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த சிம்பு, சென்னை திரும்பியதும் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளை சந்திக்கவிருப்பதாகவும்,

காமசூத்ராவின் அடுத்த பாகத்தில் சன்னிலியோன்? 

கடந்த 1996ஆம் ஆண்டு மீரா நாயர் இயக்கத்தில் ரேகா நடித்த 'காமசூத்ரா' என்ற திரைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படம் கோல்டன் சீஷெல் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டதோடு,

'தளபதி 64' படத்தில் விஜய்சேதுபதி: எப்படி சாத்தியம் ஆனது?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ள நிலையில் அவர் தற்போது வெளிநாட்டில் சுற்றுப்பயணத்தில் உள்ளார்.

இந்தி மொழி குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறிய கருத்து!

இந்தியா முழுவதும் பரவலாக பரவியிருக்கும் இந்தி மொழி, தமிழகத்தில் மட்டும் கடந்த 50 ஆண்டுகளாக நுழைய முடியாத வகையில் உள்ளது. அதற்கு திராவிட கட்சிகளின் தீவிர எதிர்ப்பு முக்கிய காரணம்